சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

சட்டத்தில் இடம் இருக்கிறதா?

Updated : செப் 15, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

எஸ்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நீதிமன்றத்திற்கு, முக்கியமான நிறைய வழக்குகளுக்கு, தீர்ப்பு வழங்க வேண்டியுள்ளது. நீதிமன்றத்தின் நேரத்தை, தேவையில்லாமல் வீணடிப்போர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.'கலைஞர் தமிழ் பேரவை'யின் மாநில செயலர் பி.ராதாகிருஷ்ணன், சென்னை, டி.எம்.எஸ்., மெட்ரோ ரயில் நிலையத்திற்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை அறிவிக்கக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.'இன்னும், எட்டு மாதத்தில், தி.மு.க., ஆட்சி தான்...' என, அக்கட்சித் தலைவர்கள், மூன்று வேளையும் முழங்கிக் கொண்டிருக்கும்போது, இந்த ராதாகிருஷ்ணன் குறுக்கே புகுந்து, வழக்கு தொடர்ந்திருப்பது, நெருடலாக உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் வென்று, ஆட்சிக் கட்டிலில், தி.மு.க., அமரும்போது, அந்த ரயில் நிலையத்திற்கு, கருணாநிதி பெயரை சூட்டிக் கொள்ளலாமே!அப்படியே, மற்ற அனைத்து ரயில் நிலையங்களுக்கும் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, துர்கா என, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் பெயரைச் சூட்டிக் கொள்ளலாமே!எதற்காக வழக்கு தொடுக்க வேண்டும்?ஒருவேளை, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெல்லும் என்பதில், பி.ராதாகிருஷ்ணன் போன்ற அக்கட்சியினருக்கே நம்பிக்கை இல்லையோ?இது போன்று, நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லாத வழக்குகளை, முகாந்திர நிலையிலேயே தள்ளுபடி செய்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க முயன்றதற்காக, மனுதாரருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் வழங்க வேண்டும். சட்டத்தில் அதற்கு இடமிருக்கிறதா?


மாணவர்களே சிந்திப்பீர்!ஸ்ரீதர், மதுரையிலிருந்து எழுதுகிறார்: மாணவச் செல்வங்களே... அரசியல்வாதிகளை நம்பி ஏமாந்து விடாதீர்.எந்த அரசியல்வாதியும், பதவிக் காலம் முடிந்தவுடன், வேறு வேலைக்குச் செல்லப் போவதில்லை. தலைமுறைகளை தாண்டியும், தேவையான சொத்து சேர்த்துள்ளனர். சாதாரண, நடுத்தர வர்க்கத்தை சார்ந்த நாம், பணி செய்து சம்பாதித்தால் மட்டுமே, வாழ்க்கை சக்கரம் இயங்கும்.நோய்கள் பலவிதம். அறுவை சிகிச்சை வாயிலாக சரிசெய்ய வேண்டிய நோயை, மாத்திரை கொடுத்து குணப்படுத்த இயலாது; அப்படி நம்பி செயல்பட்டால், உயிர் போய் விடும். அதை போலத் தான், 'அரியர்' வைத்திருப்போர் அனைவரும், 'ஆல் பாஸ்' அறிவிப்பும்!குறிப்பிட்ட பாட தேர்வில் தோல்வியடைந்த ஒருவர், எப்படி அந்த துறையில் சரியாக வேலை பார்க்க முடியும்?வருங்காலத்தில், அனைத்து துறைகளிலும் தனியார் பங்களிப்பு தான் அதிகமாக வரவுள்ளது. அரசு நிறுவனங்களின் பெரும்பாலான வேலை வாய்ப்பு விளம்பரங்களில், ஆண்டு ஒப்பந்தப்பணி என்ற வகையில் தான் உள்ளது. தனியார் நிறுவனங்களில், தகுதி மட்டுமே அளவுகோல்.
தகுதிக்கேற்ப சம்பளம். இப்படியான சூழ்நிலையில், அரியர் வைத்திருந்து, 'ஆல் பாஸ்' பெற்ற மாணவர்களை, அந்நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துவதற்கு வாய்ப்பே இல்லை.'ஆல் பாஸ் போட்ட ஆண்டவனே...' எனக் கொண்டாடி, 'போஸ்டர்' ஒட்டும் மாணவர்களின் எதிர்காலம், நிச்சயம் கேள்விக்குறியாகும்!அரசியல்வாதிகளை நம்பி, படிக்கும் காலத்தை, மாணவர்களே வீண் செய்ய வேண்டாம். நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால், சுயநல அரசியல்வாதிகள் காணாமல் போய் விடுவர். அதனால் நேர்வழியில் தேர்வு எழுதி, முழுமையான கல்வி தகுதியை முன்னிறுத்தி, வாழ்வில் முன்னேற பாருங்கள்.
அரியர் வைத்திருக்கும், மருத்துவத் துறை மாணவர்களுக்கு, ஆல் பாஸ் அறிவித்தால் என்னாகும்? அப்படி பாஸ் பண்ணின டாக்டரிடம், நீங்கள் மருத்தும் பார்ப்பீர்களா?எந்த அரசியல்வாதியாவது, திறனுடன் கூடிய அறிவு வளர்க்கும் தேர்வு வேண்டும் என சொல்றாங்களா?'நீட்' வேண்டாம், நுழைவுத் தேர்வு வேண்டாம், மும்மொழிக் கொள்கை வேண்டாம், பொதுத் தேர்வு வேண்டாம்... இப்படியே, கல்வியே வேண்டாம் எனக் கூறும் பட்டியல் தான் நீள்கிறது.மக்களை முட்டாளாக வைத்திருப்பது தான் அரசியல்வாதிகளின் நோக்கம். எனவே, தயவு செய்து சிந்திப்பீர்!


தவறான அர்த்தங்கள்!வீ.ஆர்.கோபால், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 1975ல், அப்போது பிரதமராக இருந்த இந்திரா, தனக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டதும், நாட்டில், 'எமர்ஜென்சி' என்ற, அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தினார்.இதனால், நாட்டு மக்களும், பல்வேறு அரசியல் தலைவர்களும் இன்னலுக்கு உள்ளாயினர். பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்; பத்திரிகைகள், கடும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன.கடந்த, 1976 செப்., 1ம் தேதி, அப்போதைய, மத்திய சட்டத் துறை அமைச்சர் கோகலே, பார்லிமென்டில், சட்டப் பிரிவின், 42வது திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். பின், அத்திருத்தம் சட்டமாக்கப்பட்டது.இந்த, 42வது திருத்த சட்டத்தில் தான், 'மதச்சார்பின்மை, சோஷலிசம்' என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டு, நடைமுறைக்கு வருகின்றன.அதாவது, 1976க்கு முன், அந்த வார்த்தைகள், நம் சட்டத்தில் இல்லை. இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய மேதைகள், 'மதச்சார்பின்மை' என்ற வார்த்தையை, சட்டத்தில் இணைக்கவில்லை.
இன்று, அந்த வார்த்தைகளை கையாண்டு தான், பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் துாண்டி விடுகின்றன.எமர்ஜென்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தத்தில் இடம்பெற்ற, 'மதச்சார்பின்மை, சோஷலிசம்' வார்த்தைக்கு, இன்று தவறான அர்த்தம் கற்பிக்கப்படுகிறது.அந்த வார்த்தைகளும், அதன் துணையோடு எதிர்க்கட்சிகள் செய்யும் அரசியலும், ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகாரத்தை தான் கோடிட்டு காட்டுகின்றன.
இதன் தொடர்ச்சி தான், இன்று, மத்திய அரசு எந்த நலத்திட்டங்கள் செயல்படுத்தினாலும், அதை எதிர்க்கட்சியினர் எதிர்ப்பதும், பிரதமர் மோடியை விமர்சிப்பதும்!ஒருவேளை, பிரதமர் மோடி, காங்கிரஸ் பின்பற்றிய, எமர்ஜென்சி நடைமுறையை அறிவித்து, அதன் விளைவுகளை புரிய வைத்தால், அந்த வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வரோ?
இன்றைய இளைஞர்கள், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளின் சுயரூபத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghavan - chennai,இந்தியா
15-செப்-202012:36:48 IST Report Abuse
Raghavan மதுரை ஸ்ரீதர் அவர்களின் "மாணவச்செல்வங்களே" அறிவுரை மிகவும் அருமை. இந்த காலத்து மாணவர்களுக்கு தேவையான ஒன்று.
Rate this:
Cancel
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
15-செப்-202011:18:14 IST Report Abuse
T.S.SUDARSAN ஸ்ரீதர், மதுரையிலிருந்து எழுதுகிறார்: மாணவச் செல்வங்களே... அரசியல்வாதிகளை நம்பி ஏமாந்து விடாதீர்.எந்த அரசியல்வாதியும், பதவிக் காலம் முடிந்தவுடன், வேறு வேலைக்குச் செல்லப் போவதில்லை. தலைமுறைகளை தாண்டியும், தேவையான சொத்து சேர்த்துள்ளனர். சாதாரண, நடுத்தர வர்க்கத்தை சார்ந்த நாம், பணி செய்து சம்பாதித்தால் மட்டுமே, வாழ்க்கை சக்கரம் இயங்கும்.நோய்கள் பலவிதம். அறுவை சிகிச்சை வாயிலாக சரிசெய்ய வேண்டிய நோயை, மாத்திரை கொடுத்து குணப்படுத்த இயலாது அப்படி நம்பி செயல்பட்டால், உயிர் போய் விடும். அதை போலத் தான், 'அரியர்' வைத்திருப்போர் அனைவரும், 'ஆல் பாஸ்' அறிவிப்பும்குறிப்பிட்ட பாட தேர்வில் தோல்வியடைந்த ஒருவர், எப்படி அந்த துறையில் சரியாக வேலை பார்க்க முடியும்? வருங்காலத்தில், அனைத்து துறைகளிலும் தனியார் பங்களிப்பு தான் அதிகமாக வரவுள்ளது. அரசு நிறுவனங்களின் பெரும்பாலான வேலை வாய்ப்பு விளம்பரங்களில், ஆண்டு ஒப்பந்தப்பணி என்ற வகையில் தான் உள்ளது. தனியார் நிறுவனங்களில், தகுதி மட்டுமே அளவுகோல். தகுதிக்கேற்ப சம்பளம். இப்படியான சூழ்நிலையில், அரியர் வைத்திருந்து, 'ஆல் பாஸ்' பெற்ற மாணவர்களை, அந்நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துவதற்கு வாய்ப்பே இல்லை.'ஆல் பாஸ் போட்ட ஆண்டவனே...' எனக் கொண்டாடி, 'போஸ்டர்' ஒட்டும் மாணவர்களின் எதிர்காலம், நிச்சயம் கேள்விக்குறியாகும்அரசியல்வாதிகளை நம்பி, படிக்கும் காலத்தை, மாணவர்களே வீண் செய்ய வேண்டாம். நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால், சுயநல அரசியல்வாதிகள் காணாமல் போய் விடுவர். அதனால் நேர்வழியில் தேர்வு எழுதி, முழுமையான கல்வி தகுதியை முன்னிறுத்தி, வாழ்வில் முன்னேற பாருங்கள். அரியர் வைத்திருக்கும், மருத்துவத் துறை மாணவர்களுக்கு, ஆல் பாஸ் அறிவித்தால் என்னாகும்? அப்படி பாஸ் பண்ணின டாக்டரிடம், நீங்கள் மருத்தும் பார்ப்பீர்களா?எந்த அரசியல்வாதியாவது, திறனுடன் கூடிய அறிவு வளர்க்கும் தேர்வு வேண்டும் என சொல்றாங்களா?'நீட்' வேண்டாம், நுழைவுத் தேர்வு வேண்டாம், மும்மொழிக் கொள்கை வேண்டாம், பொதுத் தேர்வு வேண்டாம்... இப்படியே, கல்வியே வேண்டாம் எனக் கூறும் பட்டியல் தான் நீள்கிறது.மக்களை முட்டாளாக வைத்திருப்பது தான் அரசியல்வாதிகளின் நோக்கம். எனவே, தயவு செய்து சிந்திப்பீர்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
15-செப்-202008:06:22 IST Report Abuse
Darmavan கோர்ட் வழக்கு :கோர்ட் ஏன் இந்த மாதிரி வழக்குகளை ஏர்க்கிறது.ஏன் தள்ளுபடி செய்யவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X