பொது செய்தி

தமிழ்நாடு

கசிவுநீர் வௌியேறும் மலைப்பாதை இறைச்சல் பாலம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

கூடலுார் : பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் முழுமையாக ராட்சத குழாய்கள் வழியாக வெளியேறுவதால் குமுளி மலைப்பாதையில் உள்ள இறைச்சல் பாலம் வழியாக கசிவுநீர் மட்டுமே வெளி யேறுகிறது.

பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்படும் நீர் குமுளி மலைப்பாதையில் உள்ள ராட்சத குழாய்கள்வழியாக வெளியேறி லோயர்கேம்பில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் தேவைக்கேற்ப மின்உற்பத்தி செய்தபின்முல்லைப்பெரியாற்றில் ஓடி வைகை அணையைச் சேரும்.மின் உற்பத்தி செய்யாத நாட்களில் இத்தண்ணீர் குமுளி மலைப்பாதையில் உள்ள இறைச்சல் பாலம் வழியாக வெளியேறும். ஆக. 7 ல் 1650 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

லோயர்கேம்ப் மின்நிலையத்தில் முழுஅளவு மின் உற்பத்தி செய்ய 1600 கன அடி நீர் போதும். அதற்கு மேல் வரும் நீர் இறைச்சல் பாலம்வழியாக வெளியேறும்.ஆக. 9 ல் 2000 கன அடிக்குமேல் நீர்திறப்பு இருந்தது. கூடுதல் நீர் இறைச்சல் பாலம் வழியாக திறந்து விடப்பட்டிருந்தது.தற்போது 1200 கன அடி நீர்மட்டுமே திறந்து விடப்பட்டுள்ள நிலையில் மின் உற்பத்திக்கு முழுமையாக பயன்படும் என்பதால் ராட்சத குழாய் வழியாக வெளியேறுகிறது. இதனால் 'போர்பை' அணையிலிருந்து இறைச்சல் பாலத்தில் கசிவு நீர் மட்டுமே வெளியேறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X