பொது செய்தி

இந்தியா

கொரோனா தொற்றில் இருந்து 37.8 லட்சம் பேர் மீண்டனர்

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுடில்லி : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, நேற்றைய நிலவரப்படி, 48.46 லட்சமாக உயர்ந்துள்ளது. நோய் தாக்கத்தில் இருந்து, 37.8 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர்.

இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை:நாட்டில், கொரோனா வைரசால் பாதிப்புக்கு உள்ளானோரை கண்டறிய, நேற்று வரை, 5.72 கோடி பேரிடம், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த, 24 மணி நேரத்தில், 9.87 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் நடந்துள்ளன. அவற்றின் முடிவில், 92 ஆயிரத்து, 071 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது உறுதியானது. இவர்களுடன், ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை, 48 லட்சத்து, 46 ஆயிரத்து, 427ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில், 9.86 லட்சம் பேர், சிகிச்சையில் உள்ளனர். தொற்றில் இருந்து, 37 லட்சத்து, 80 ஆயிரத்து, 107 பேர் குணமடைந்துள்ளனர்; இதனால், மீட்பு விகிதம், 78 சதவீதமாக உயர்ந்து உள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனாவிற்கு, 1,136 பேர் பலியாகி உள்ளனர். இதில், அதிகபட்சமாக மஹா.,வில், 416 பேர் இறந்துள்ளனர். கர்நாடகாவில், 104; உ.பி.,யில், 80; தமிழகத்தில், 74; பஞ்சாபில், 68; ஆந்திராவில், 66; மே., வங்கத்தில், 58; ம.பி.,யில், 34; டில்லியில், 29; ஹரியானாவில், 19 பேரும் உயிரிழந்து உள்ளனர்.நாட்டில், இதுவரை இறந்தோர் எண்ணிக்கை, 79 ஆயிரத்து, 722 ஆக உயர்ந்துள்ளது;

இறப்பு விகிதம், 1.64 சதவீதமாக குறைந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கையில், 29 ஆயிரத்து, 531 பேருடன், மஹா., முதலிடத்தில் தொடர்கிறது.அடுத்ததாக, தமிழகத்தில், 8,381 பேரும், கர்நாட காவில், 7,265; ஆந்திராவில், 4,912; டில்லியில், 4,744; உ.பி.,யில், 4,429 பேரும் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X