சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

கலெக்டர் அதிரடியால் முறைகேடு அதிகாரிகள் கலக்கம்!

Added : செப் 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

 டீ கடை பெஞ்ச்

கலெக்டர் அதிரடியால் முறைகேடு அதிகாரிகள் கலக்கம்!

''ஊரடங்கு எல்லாம் முடிஞ்சதும், மாநில மாநாட்டை நடத்த முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என, காபி டம்ளருடன், கதையை ஆரம்பித்தார், குப்பண்ணா.
''எல்லா கட்சிகளும் தான் தேர்தலுக்கு ஆயத்தமாகிட்டு இருக்கு... நீரு, எந்தக் கட்சியை சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''தமிழக, பா.ஜ.,வுக்கு சமீபத்துல, நிறைய நிர்வாகிகளை நியமிச்சிருக்காளோல்லியோ... இவா எல்லாரையும், சமீபத்துல, சென்னையில இருக்கற கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு, மாநில தலைவர் முருகன் வரவழைச்சுஇருக்கார் ஓய்...
''அவா மத்தியில முருகன் பேசறச்சே, 'பிரதமர் மோடியின் சாதனைகளை, ஒவ்வொரு வீட்டுக்கும் தெரியப்படுத்தி,
பிரசாரம் செய்யுங்க... ஊரடங்கு முழுசா முடிவுக்கு வந்ததும், மாநில மாநாடு நடத்தணும்'னு எதிர்கால திட்டங்களை விவரிச்சிருக்கார்...
''எல்லாத்துக்கும் தயாரா இருக்கறதா, மாநில நிர்வாகிகளும் உறுதி குடுத்துட்டு போயிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஆளாளுக்கு புகார் பட்டியலை வாசிச்சிருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.
''யாரு வே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''மாவட்ட வாரியா, கட்சி நிர்வாகிகளிடம், ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்'ல ஆலோசனை நடத்துறாருங்க... சமீபத்துல, ஈரோடு
நிர்வாகிகளிடம் பேசியிருக்காருங்க...
''அப்ப, தெற்கு மாவட்டச் செயலர் முத்துசாமியை, அவரது ஆதரவாளர்கள் கடுமையா புகழ்ந்து தள்ளியிருக்காங்க... ஆனா, முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, மாவட்ட துணைச் செயலர் செந்தில்குமார், மாநில துணை பொதுச் செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரது ஆதரவாளர்கள், முத்துசாமி தரப்பை கடுமையாக விமர்சனம்
பண்ணியிருக்காங்க...
''அதே மாதிரி, வடக்கு மாவட்டச் செயலர் நல்லசிவம், ஆளுங்கட்சியினர் கூட கைகோர்த்து செயல்படுறதா, பலரும் புகார் சொல்லியிருக்காங்க... இதை எல்லாம் கேட்டு, ஸ்டாலின்
கடுமையா, 'அப்செட்' ஆகிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மதுரையில மஞ்ச குளிச்ச அதிகாரிகள் கலக்கத்துல இருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்துல, தமிழகம் முழுக்க பல மாவட்டங்கள்ல நிறைய முறைகேடுகள் நடந்திருக்கு...
''மதுரையில, இந்த திட்டத்துல, 16 ஆயிரத்து, 474 பேர் பதிவு செய்ததுல, 11, ஆயிரத்து, 135 பேர் தகுதியற்றவர்கள் என்பது, உயரதிகாரிகள் விசாரணையில தெரிஞ்சுஇருக்குது பா...
''போலி விவசாயிகள், 6,000 பேரின் வங்கி கணக்குல போடப்பட்ட, 8 லட்சம் ரூபாய் திரும்ப வசூலாகியிருக்கு... இது சம்பந்தமா தீவிர விசாரணை நடத்த, கலெக்டர் வினய் ஒரு குழுவை
நியமிச்சிருக்காரு பா...''அந்தக் குழுவும், போலி விவசாயிகளுக்கு சான்றிதழ் குடுத்து, ஒப்புதல் வழங்கிய வருவாய், வேளாண் அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்திட்டு இருக்குது... இதனால, கறுப்பு ஆடுகள் எல்லாம் கலக்கத்துல இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''அது சரி... உப்பு தின்னா தண்ணி குடிக்கணுமுல்லா...'' என்றபடியே அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் நகர்ந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
15-செப்-202019:46:18 IST Report Abuse
Anantharaman Srinivasan போலி விவசாயிகளுக்கு சான்றிதழ் குடுத்து, ஒப்புதல் வழங்கிய வருவாய், வேளாண் அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்திட்டு இருக்குது. """விசாரணை இருக்கட்டும். இந்த அளவுக்கு ஊழல் புரிய துணைபுரிந்து ஊக்கம் கொடுத்த அரசியல் புள்ளி யார்?? எப்பவும் போல் மாட்டபோவது இடைபட்ட அதிகாரிகளே... பெருச்சாளி தப்பிவிடும்..
Rate this:
Cancel
A R J U N - sennai ,இந்தியா
15-செப்-202011:53:26 IST Report Abuse
A R J U N ....பிரதமர் மோடியின் சாதனைகளை, ஒவ்வொரு வீட்டுக்கும் தெரியப்படுத்தி,...என்ன சாதனையை சொல்ல முடியும்....கிசான் திட்ட ஊழல்,100 நாள் வேலை...இதுலே அடிச்ச கோடியையா.. சொல்ல சொல்றீங்க..
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-செப்-202006:25:19 IST Report Abuse
D.Ambujavalli வெறும் ஒரு ஸ்பூன் உப்பு இல்லை உப்பளத்தையே ‘முழுங்கி’ ஏப்பம் விட்டவர்கள், குடிக்க கடல் தண்ணீரே போதாது ஆனால் ‘பிடிப்பவரைப் பிடித்து, முடித்துக்கொள்ளும்’ சமர்த்து இல்லாமலா இத்தனையும் செய்திருப்பார்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X