நபார்டு தலைவர் தமிழகம் வருகிறார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நபார்டு' தலைவர் தமிழகம் வருகிறார்

Added : செப் 14, 2020
Share
 'நபார்டு' தலைவர்  தமிழகம் வருகிறார்

சென்னை : 'நபார்டு' வங்கியின் தலைவர் ஜி.ஆர்.சிந்தாலா, இன்று தமிழகம் வருகிறார். பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து, நாளை மறுதினம் ஆலோசனை நடத்த உள்ளார்.

தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான, நபார்டு, கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கும், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த திட்டங்களுக்கும், மாநில அரசுகளுக்கு நிதியுதவி செய்கிறது.விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சிறு விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், பிரதமர் நரேந்திர மோடி, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி அளிக்கும் திட்டத்தை, சமீபத்தில் துவக்கி வைத்தார்.

அத்திட்டத்தின் கீழ், நபார்டு வங்கியும், தேசிய வங்கிகளும், தமிழகத்தில், விவசாய குழுக்கள், கூட்டுறவு வங்கிகளுக்கு கடன் வழங்க உள்ளன.இந்நிலையில், நபார்டு வங்கி தலைவர் சிந்தாலா, ஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக, இன்று விருதுநகர் மாவட்டம் வருகிறார். நாளை மதுரையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நாளை மறுதினம் சென்னையில், முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து பேச உள்ளார்.

அப்போது, தமிழகத்தில், ஊரக உள்கட்டமைப்பு மேம்பாடு, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடன் வழங்குவதை அதிகரிப்பது, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்குவது, சுய உதவிக் குழுக்களை டிஜிட்டல் மயமாக்குவது மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்குவது ஆகியவற்றிற்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X