ஊரடங்கால் உயிரிழப்புகள் தடுப்பு சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

Added : செப் 14, 2020
Share
Advertisement
 ஊரடங்கால் உயிரிழப்புகள் தடுப்பு சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

புதுடில்லி : “கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அமலில் இருந்த நான்கு மாத கால ஊரடங்கு, 37 ஆயிரம் முதல், 78 ஆயிரம் வரையிலான உயிரிழப்புகளை தடுத்துள்ளது,” என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.


குற்றச்சாட்டு : கொரோனா நெருக்கடி காலத்தை, சரியாக கையாளவில்லை என, மத்திய அரசு மீது, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், லோக்சபாவில் நேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது: நாட்டில், வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம், வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

வைரசால், 10 லட்சம் பேரில், 3,328 பேர் மட்டுமே, பாதிக்கப்படுகின்றனர்; 10 லட்சம் பேரில், 55 உயிரிழப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன. இதன்படி பார்த்தால், உலகத்திலேயே குறைந்த பாதிப்புகளைக் கொண்ட நாடுகளில், இந்தியாவும் ஒன்று.நான்கு மாத கால ஊரடங்கு, 14 - 29 லட்சம் பேரை, வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்து உள்ளது. மேலும், 37 ஆயிரம் முதல், 78 ஆயிரம் வரையிலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.


ஏற்றுமதி : கடந்த மார்ச் மாதம் இருந்ததை விட, தற்போது, தனிமைப்படுத்துவதற்கான படுக்கைகள், 36.3 மடங்கு அதிகமாகவும், ஐ.சி.யூ., பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, 24.6 மடங்கு அதிகமாகவும் உள்ளன. பாதுகாப்பு உடைகள், என் - 95 முக கவசங்கள் மற்றும் 'வென்டிலேட்டர்'கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைக்கு நாம் உயர்ந்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X