பொது செய்தி

தமிழ்நாடு

சிமென்ட், மணல் தட்டுப்பாடு கட்டுமான பணிகளுக்கு சிக்கல்

Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், சிமென்ட், மணல் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள திடீர் தட்டுப்பாடு காரணமாக, கட்டுமான திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா ஊரடங்கு அமலான மார்ச் முதல், கட்டுமான பணிகள் முழுமையாக முடங்கின. வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஆற்று மணல் பின்னர், நிபந்தனைகள் அடிப்படையில், மே மாதத்தில் கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், பணியாளர்கள் பற்றாக்குறையால், கட்டுமான பணிகளை துவங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஊரடங்கில், தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், வெளி மாநில தொழிலாளர்கள், தமிழகம் திரும்பி உள்ளனர்.

இருப்பினும், பல நிறுவனங்களால் கட்டு மான பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:ஊரடங்கு கட்டுப்பாடு, வெளி மாநில தொழிலாளர் பிரச்னைகள் ஓரளவுக்கு சரியாகி உள்ளன. இப்போதாவது கட்டுமான பணிகளை துவங்கலாம் என்றால், சிமென்ட், மணல் கிடைப்பதில் செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஆற்று மணல் கிடைப்பதில்லை என்பதால், 'எம் - சாண்ட்' பயன்படுத்துகிறோம். ஆனால், தற்போது, தேவைக்கு ஏற்ப ஆற்று மணல் மற்றும் எம் - சாண்ட் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பிரச்னை : இதே போல சிமென்ட் உற்பத்தியாளர்கள், முதலில், மூட்டைக்கு, 80 ரூபாய் வரை விலையை உயர்த்தினர். இதன் பின், உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளனர்.ஆலைகளில் இருந்து வரும் சிமென்ட் அளவு பாதியாக குறைந்துள்ளது. செயற்கையான இந்த தட்டுப்பாடுகளால், கட்டுமான பணிகளை துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தலையிட்டு, இப்பிரச்னையை தீர்க்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
15-செப்-202010:13:20 IST Report Abuse
Ramachandran Rajagopal இரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை கணக்கில் கொண்டு ஒவ்வொருவரும் எவ்வளவு பரப்பளவிற்கு வீடு கட்டலாம் என விதிமுறை வகுத்து செயல்படுத்தி இருந்தால் கட்டமான பொருள்களுக்கு தடை ஏற்பட்டிருக்காது.கறுப்புப் பணம் வைத்திருப்போர் அதனை கையில் வைத்திருந்தாள் அரசாங்கம் பறிமுதல் செய்துவிடும் என அளவு கடந்த கட்டிடங்கள் கட்டுவதில் முதலீடு செய்கின்றனர்.இதனை அரசாங்கம் கண்டுகொள்வது இல்லை.இயற்கையில் பொருட்கள் கிடைக்காமல் போகின்றது.இதனை உணராமல் வெறியர்கள் கூக்குரலிடுகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X