பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலை உடைப்பு பகுதிகள் கவனம் செலுத்த அறிவுரை

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருப்பூர்:முந்தைய காலங்களில், நீர்நிலைகள் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில், புனரமைப்புப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.வடகிழக்குப் பருவமழை துவங்க உள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும், வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட நிர்வாகத்தினர் கூறியதாவது:கடந்தாண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளில், ஏரி, குளம், குட்டை உட்பட நீர்நிலைகள் உடைப்பு ஏற்பட்ட பகுதிகள், வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட இடங்கள் போன்றவற்றை அடையாளம் கண்டறிந்து, ஆய்வு மேற்கொள்ள, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், தாலுகா, ஒன்றிய அளவிலான அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிப்போர் சிலரை தன்னார்வலர்களாக தேர்வு செய்துள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தனியாக பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த முறை, நீர்நிலைகள் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள், புனரமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.வெள்ளம் சூழ்ந்தால், பள்ளிகள், சமுதாயக்கூடங்களில், பொதுமக்களை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புனரமைப்புப்பணி மேற்கொள்ளாத நீர்நிலைகளில், உடனடியாக குடிமராமத்துபணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண் துறை சார்பில், அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும், இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X