தமிழ்நாடு

தேனி மாவட்டத்தில் பால் குளிரூட்டும் பல்க் மில்க் கூலர் அமைக்கப்படுமா

Added : செப் 14, 2020
Share
Advertisement

தேனி : தேனி மாவட்டத்தில் பால் குளிரூட்டும் பல்க் மில்க் கூலர் (பி.எம்.சி.) நிலைய வசதியை ஆவின் அமைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதன் மூலம் பால் வீணாவது தடுக்கப்படும்.

மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பில் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். பால்மாடு வளர்ப்பு சிறப்பாக நடக்கிறது. தினமும் 4 முதல் 5 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில் அதிகம் தனியார் கொள்முதல் செய்கின்றனர். தேனியில் 450 பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சராசரியாக 1.20 லட்சம் லிட்டர் தினமும் கொள்முதல் செய்யப் படுகிறது. இரு மாதங்களுக்கு முன் 1.40 லட்சமாக உயர்ந்தது. பாலை பதப்படுத்த முடியாமல் பல ஆயிரம் லிட்டர் வீணானது.

உற்பத்தியாளர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை என கொள்முதல் செய்யாமல் தவிர்த்தனர்.உற்பத்தி அதிகரிக்கும் போது குளிரூட்டும் வசதி குறைவால் பால் வீணானது. ஆவினுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. தேனி, மதுரை ஆவினுடன் இணைந்து இருந்த போது 2009ல் கண்டமனுார், பாலுாத்து, குமணன்தொழு, வருஷநாடு, முருக்கோடை, வீரபாண்டி பகுதிகளில் பல்க் மில்க் கூலர் (பி.எம்.சி.) அமைத்து ஒவ்வொன்றிலும் தலா 2 ஆயிரம் லிட்டர் பதப்படுத்தினர்.

விவசாயிகளிடம் மறுக்காமல் கொள்முதல் செய்தனர். ஆனால் திடீரென படிப்படியாக குளிரூட்டும் நிலையம் பயன்பாட்டை குறைத்து முறையாக செயல்பட வில்லை என மூடுவிழா நடத்தி இங்கிருந்த கூலர், மோட்டார்களை ஆவின் எடுத்து சென்றது.கூலர் வசதி தேவைதேனி ஆவின் உருவாகி ஓராண்டாகி லாபகரமாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் பால் உற்பத்தி அதிகரிக்கும் போது குளிரூட்டும் வசதி இல்லை என கைவிரித்து கொள் முதல் செய்ய மறுக்கிறது.

உற்பத்தி ஆகும் பாலை விற்க வழி தெரியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் கொட்டப்படுகிறது. எனவே மாவட்டத்தில் அதிக பால் உற்பத்தி செய்யும் சங்கங்கள், வருஷநாடு, மயிலாடும்பாறை, கம்பம் போன்ற பகுதிகளில் பல்க் மில்க் கூலர் நிலையங்கள் வசதி செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என உற்பத்தியாளர்கள் ஆவினை வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X