பொது செய்தி

தமிழ்நாடு

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடிவு

Added : செப் 14, 2020
Share
Advertisement

கம்பம் : ஊரடங்கில் தளர்வால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க செப்.20 முதல் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சுருளி அருவி மார்ச்சில் மூட்டப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வால் இயல்புநிலை திரும்புவுதால் பயணிகளை அனுமதிக்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் ஆலோசித்து செப். 20 முதல் அருவியில் பயணிகளை அனுமதிக்கலாம் என முடிவு செய்துள்ளனர். ஒரே சமயத்தில் எத்தனை பேர் குளிக்கலாம், முககவசம் அணிவது, சானிடைசர் பயன் படுத்துவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட அம்சங்கள், அதனை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கின்றனர்.இதனை கலெக்டர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X