பொது செய்தி

தமிழ்நாடு

முதல் போக நெல் நடவு தீவிரம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

சின்னமனுார் : சின்னமனுார் பகுதியில் ஆயிரத்து 500 ஏக்கரில் முதல் போகம் நெல்நடவு தீவிரமாக நடக்கிறது.

பெரியாறு பாசனத்தில் சின்னமனுார், மார்க்கையன்கோட்டை, குச்சனுார் பரவில் ஆயிரத்து 500ஏக்கர் இருபோகம்நெல் சாகுபடி செய்யப்படுகிறது. பருவமழை ஏமாற்றுவதால் 2017 க்கு பின் இப்பகுதியில் இருபோகம் நடவு செய்யப்படவில்லை.இந்தாண்டு தென்மேற்குபருவமழை தாமதமாக பெய்ததால் முதல் போகம் நடவு பிந்தியுள்ளது. தற்போது சின்னமனுார் பகுதியில் நெல் நடவு தீவிரமாக நடக்கிறது.

விவசாயி முத்துவேல் குமரன் கூறுகையில், ''முதல் போகத்திற்கு 120 நாட்கள் தண்ணீர் தர அரசு உத்தரவிட்டுள்ளது.தற்போது நடவுசெய்யப்படும் நாற்று ஜனவரியில் அறுவடை செய்யப்படும். அதன் பின்நாற்றங்கால் பாவி இரண்டாம் போகம் நடவுசெய்ய கால இடைவெளியில்லை. இதனால்இந்தாண்டும் ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்ய முடியும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X