சம்பவம் செய்தி

தமிழ்நாடு

300 பேரிடம் 18 லட்சம் மோசடி; திண்டுக்கல் எஸ்.பி.,யிடம் புகார்

Added : செப் 15, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 300க்கும் மேற்பட்டோரிடம் அறக்கட்டளை ஒன்று ரூ.18 லட்சம் மோசடி செய்துள்ளதாக எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நிலக்கோட்டை அருகே தூதன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேண்டாமணி. இவர் எஸ்.பி. அலுவலகத்தில் அளித்துள்ள மனு: நிலக்கோட்டை பகுதியில் செயல்படும் ஒரு அறக்கட்டளையின் நிர்வாகிகள் ரூ.5000 ஆயிரம் பணம் செலுத்தினால் ரூ.ஒரு லட்சம் கடனுதவி பெற்றுத் தருவதாக கூறினர்.அதனை நம்பி ரூ.5000, ஆவணச்செலவு ரூ.1000 என மொத்தம் ரூ.6000 கொடுத்தேன். என்னைப் போல 300 பேர் இதே தொகையை செலுத்தியுள்ளனர்.

ஆனால், அவர்கள் கூறியபடி இதுவரை கடன் பெற்று கொடுக்கவில்லை. மாதக்கணக்கில் அலைந்து திரிகிறோம். அறக்கட்டளை நிர்வாகியிடம் கேட்டால் நிர்வாக இயக்குநரிடம் கேட்க சொல்கின்றார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி., அலுவலக போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X