பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., அலுவலகம் இடம் மாறியது

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருப்பூர்:மத்திய ஜி.எஸ்.டி., துணை கமிஷனர் அலுவலகம், நேற்று முதல், குமார்நகரில் உள்ள புதிய கட்டடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட, மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை (ஜி.எஸ்.டி.,), திருப்பூரில், பல்லடம் ரோடு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகிலும் இயங்கிவந்தன.சரக அலுவலகங்கள் மற்றும் துணை கமிஷனர் அலுவலகங்கள், வெவ்வேறு இடங்களில் செயல்பட்டதால், ஆவணம் கையாள்வது உட்பட, அலுவல் சார்ந்த பணிகளில், அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, திருப்பூர் - அவிநாசி ரோடு, குமார்நகரில் உள்ள வாடகை கட்டடத்தில், நேற்று முதல் செயல்பட துவங்கியது. விரைவில், உயரதிகாரிகள் முன்னிலையில், திறப்புவிழா நடத்தப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X