பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய தொழிலாளர் பற்றாக்குறை: கை கொடுக்கும் வெளிமாவட்டத்தவர்

Added : செப் 15, 2020
Share
Advertisement
விவசாய தொழிலாளர் பற்றாக்குறை: கை கொடுக்கும் வெளிமாவட்டத்தவர்

பல்லடம்:விவசாயத்தில், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிமாவட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.பல்லடம் வட்டாரத்தில், விவசாய தொழில் பிரதானமாக உள்ளது. உழவு முதல் அறுவடை வரை, அனைத்து பணிகளுக்கும், விவசாய கூலி தொழிலாளர்கள் தேவை படுகின்றனர்.சமீபகாலமாக, தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால், விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் திணறிவந்தனர்.
இந்நிலையில், வெளிமாவட்ட தொழிலாளர்கள், விவசாய தொழிலில், ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனர்.விவசாயிகள் சிலர் கூறியதாவது;திருப்பூர், பனியன் தொழில் நிறுவனங்களில் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க, வெளி மாநில, பிற மாவட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். போதிய வருமானம், தங்கும் வசதி, உணவு உள்ளிட்டவை வழங்கப்படுவதால், அவர்கள் அங்கு நிலைத்து பணி செய்கின்றனர். விவசாய தொழிலை பொறுத்தவரை, தினமும், 200, 300 ரூபாய் வரை மட்டுமே கூலி வழங்கப்படுவதால், விவசாய தொழிலாளர்கள் வேறு வேலைக்கு சென்று விடுகின்றனர்.
உள்ளூர் தொழிலாளர், விவசாய பணிகளுக்கு வருவதில்லை. அவ்வாறு வருபவர்களும், நுாறு நாள் வேலை திட்ட பணிக்கு சென்றுவிடுகின்றனர்.உள்ளூரில், தொழிலாளர் கிடைக்காததால், திண்டுக்கல், மதுரை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி வருகிறோம். தினசரி, 250, 350 ரூபாய் வரை சம்பளத்துடன், தங்கும் வசதியும் செய்து தருகிறோம். இதனால், விவசாய தொழிலில், ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க முடிகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X