பொது செய்தி

தமிழ்நாடு

சிகிச்சை விரைவுபடுத்த திட்டம் மருத்துவ கல்லுாரியில் ஏற்பாடு

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், திருப்பூர் அரசு மருத்துவமனையில், 148 ஆக்ஸிஜன் படுக்கை, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க, பெரிச்சிபாளையம், அரசு மருத்துவ கல்லுாரியில், தனி கட்டடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், ஐ.சி.யு., பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்களால் நேரடியாக கண்காணிக்கப்படுகின்றனர். நோயாளிகளில் பலருக்கு, ஆக்ஸிஜன் தேவைப்படுவதால், மொத்தமுள்ள, 204 படுக்கைகளில், 78 ஆக்ஸிஜன் படுக்கை அமைக்கப்பட்டன. நோயாளி எண்ணிக்கை அதிகரிப்பதால், 148 படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லுாரி டீன் வள்ளி கூறுகையில், ''மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள், விரைந்து குணமடைந்து வீடு திரும்பும் வகையில், தேவையான சிகிச்சை மற்றும் வசதி செய்து தரப்படுகின்றன. தங்கு தடையின்றி, தேவைப்படும் அளவுக்கு, கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்படுகிறது. தற்போது, கூடுதல் எண்ணிக்கையில் படுக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X