மொழியே நம் பலம்

Added : செப் 15, 2020
Share
Advertisement
மொழியே நம் பலம்

ஒரு நாட்டின் எல்லைகள் மற்றும் புவியியலை கொண்டு, அந்த நாடு அடையாளம் காணப்படுகிறது. இந்தியா, பல்வேறு மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளை கொண்டுள்ளது. இதுவே, நம் நாட்டின் பலமாகவும், ஒற்றுமையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. மோடி அரசின், புதிய கல்விக் கொள்கை வாயிலாக, ஹிந்தி உட்பட, மற்ற இந்திய மொழிகளும், ஒன்றாக வளர்ச்சி அடையும்.

- அமித் ஷா , மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

மயில்களுடன் பிரதமர்

கொரோனா தொற்று பரவல், இந்த வாரம், 50 லட்சத்தை தாண்டிவிடும். திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்புகள் மற்றும் ஒரு தனி நபரின் அகங்காரம் காரணமாகவே, இந்த தொற்று, நாடு முழுதும் பரவியது. மக்கள் தற்சார்புடன் இருக்க வேண்டும் என, மோடி அரசு கூறுகிறது. மக்கள் தங்கள் உயிரை, தாங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள், பிரதமர், மயில்களுடன் நேரம் செலவிடுவார் என்பதே இதற்கு அர்த்தம்.

- ராகுல் , எம்.பி., -- காங்கிரஸ்

மக்கள் சேவை வாரம்

வரும், 17ம் தேதி, பிரதமர் மோடிக்கு, 70 வயது பிறக்கிறது. மக்கள் சேவைக்காகவே, தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், பிரதமர் மோடி. எனவே, அவரது பிறந்த நாள் வரும் இந்த வாரத்தை, சேவை வாரமாக கொண்டாட, பா.ஜ., முடிவு செய்துள்ளது. கோடிக்கணக்கான பா.ஜ., தொண்டர் கள், இந்த வாரம் முழுதும், தங்களை மக்கள் சேவையில் ஈடுபடுத்திக் கொள்வர்.

- ஜே.பி.நட்டா , தேசிய தலைவர், பா.ஜ.,-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X