பொது செய்தி

தமிழ்நாடு

குளம், குட்டை நிரப்ப நொய்யல் நீர்: திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு

Added : செப் 15, 2020
Share
Advertisement
 குளம், குட்டை நிரப்ப நொய்யல் நீர்: திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு

திருப்பூர்:''குளம், குட்டைக்கு நொய்யல் உபரிநீரை கொண்டு செல்ல, பொதுப்பணித்துறை விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்,'' என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.சாமளாபுரம் பேரூராட்சி எல்லையில் உள்ள, பள்ளபாளையம் குளத்தில் இருந்து, தண்ணீரை உறிஞ்சி, அருகே உள்ள குளம், குட்டைகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.பள்ளபாளையம் குளத்தில் இருந்து மோட்டார் மூலமாக, தண்ணீரை எடுத்து, பள்ளிபாளையம் மேற்கு, வள்ளலார் பள்ளி அருகே உள்ள குட்டையில் நிரப்பப்படும். அங்கிருந்து, பள்ளிபாளையம் குளம், பூமலுார் ஓடை, செங்கரைப்பள்ளம் ஓடை வழியாக வேட்டுவபாளையம் குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்த ஆரம்பநிலை ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பொதுப்பணித்துறை, விவசாயிகள், மேற்கு ரோட்டரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.கலெக்டர் பேசியதாவது:வறண்டுள்ள குளம், குட்டைகளுக்கு, நொய்யல் உபரிநீரை கொண்டு செல்லும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நொய்யல் நீர் வரத்து, உபரிநீர் வெளியேற்றம், பள்ளபாளையம் குளம் இருப்பு, வழித்தடங்கள் என, அனைத்து விவரங்களுடன், பொதுப்பணித்துறை விரிவான அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்.கோவில் நிலத்தில் 'சோலார் பிளான்ட்' அமைத்து, பள்ளபாளையம் குளத்தில் இருந்து தண்ணீரை 'பம்ப்' செய்து, குட்டைக்கு எடுத்துச்செல்லும் பணியை, சாமளாபுரம் பேரூராட்சி மேற்கொள்ளும். அதற்காக, பேரூராட்சியிலும் தீர்மானம் இயற்றி ஒப்புதல் பெற வேண்டும்.பல்லடம் மற்றும் திருப்பூர் ஒன்றிய பி.டி.ஓ.,களும், தகுந்த முன்னேற்பாடு செய்ய வேண்டும். விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டதும், மேற்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, மாவட்ட நிர்வாகம் இப்பணியை மேற்கொள்ளும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X