எஸ்.பி.பி., உடல்நிலை நல்ல முன்னேற்றம்: 20 நிமிடம் வரை அமர்ந்திருந்தார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.பி., உடல்நிலை நல்ல முன்னேற்றம்: 20 நிமிடம் வரை அமர்ந்திருந்தார்

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (4)
Share
SPB, SP Balasubrahmanyam, GetWellSoonSPBsir, GetWellSoonSPB

சென்னை: ''டாக்டர்கள் முயற்சியால் எஸ்.பி.பி. 20 நிமிடங்கள் வரை அமர்ந்திருந்தார்'' என அவரது மகன் சரண் நேற்று தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்குள்ளான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 75 ஆக. 5 முதல் சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு 'எக்மோ' உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்திய மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடன் எம்.ஜி.எம். மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


latest tamil news



எஸ்.பி.பி. மகன் சரண் நேற்று வெளியிட்ட வீடியோவில், ''அப்பாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருடைய நுரையீரல் செயல்பாட்டிலும் முன்னேற்றம் அடைந்து வருவதை 'எக்ஸ்ரே'வில் பார்க்க முடிந்தது. 'பிசியோதெரபி'க்கும் அவரது உடல் நன்கு ஒத்துழைப்பு தருகிறது.

டாக்டர்கள் முயற்சியால் அப்பாவால் 20 நிமிடங்கள் வரை அமர்ந்திருக்க முடிந்தது. அவருக்கு வாய்வழி உணவு அளிப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்படவுள்ளன. அவரது உடல் சீராக இருக்கிறது. உங்களது பிரார்த்தனைக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது'' என தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X