பொது செய்தி

தமிழ்நாடு

விபத்துக்கு வழிகாட்டும் ரோடு

Added : செப் 15, 2020
Share
Advertisement

பல்லடம்:விபத்து ஏற்படும் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பல்லடம், கோவை, திருச்சி, தேசிய நெடுஞ்சாலை, வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். சரக்கு வாகனம், கன்டெய்னர் மற்றும் மணல் லாரிகள், ஆம்புலன்ஸ் என, எண்ணற்ற வாகனங்கள் இவ்வழியாக சென்று வருகின்றன. போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில், விரிசல் ஏற்பட்டு பல மாதங்களாக, சீரமைக்கப்படாததால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.பல்லடம் அடுத்த மாதப்பூர் டோல்கேட் பகுதியில், பல அடி துாரத்துக்கு, ரோட்டில் விரிசல் ஏற்பட்டு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணி மேற்கொள்ளாமல் மெத்தனம் காண்பித்து வருகின்றனர்.இப்பகுதியை கடக்கும் இரு சக்கர வாகனங்கள், விரிசலில் சிக்கி கொள்கின்றன. இரவில், வெளிச்சம் குறைவால், வாகனங்கள் தாறுமாறாக சென்று, விபத்து அபாயம் ஏற்படுகிறது.எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், ரோடு சீரமைப்புப்பணி மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X