பொது செய்தி

தமிழ்நாடு

குடற்புழு நீக்க மாத்திரை 5.61 லட்சம் பேருக்கு இலக்கு

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் துவங்கியது.குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்த சோகை, வயிறு உபாதை உள்ளிட்ட பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. அதற்கான முகாம், நேற்று துவங்கியது.கலெக்டர் அலுவலக அரங்கில், கலெக்டர் விஜயகார்த்திகேயன், பள்ளி மாணவ, மாணவியருக்கு மாத்திரை வழங்கி, முகாமை துவக்கி வைத்தார். எஸ்.பி., திஷாமிட்டல், மாநகர போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், சுகாதார பணி துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'வரும், 28ம் தேதி வரை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடியில், குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். ஒன்று முதல், 19 வயதுக்கு உட்பட்ட, 5.61 பேருக்கு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு தவறாமல், காலையில், குடற்புழு நீக்க மாத்திரை வழங்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X