எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் பள்ளிகளில் 'நீட்' தேர்வுக்கு பயிற்சி :இரட்டை வேடம் போடுவதாக பா.ஜ., குற்றச்சாட்டு

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
 தி.மு.க.,வினர் பள்ளிகளில் 'நீட்' தேர்வுக்கு பயிற்சி :

சென்னை :'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வோம்' என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., பிரமுகர்கள் நடத்தும் பள்ளிகளில், 'நீட்' தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை, பா.ஜ.,வினர் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளனர். 'இது தான் தி.மு.க.,வின் இரட்டை வேடம்' என்றும், அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


பொய்யான வாக்குறுதி



மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' எனப்படும், பொது நுழைவுத் தேர்வு, 2013ல், காங்கிரஸ் -- தி.மு.க., கூட்டணி, மத்தியில் ஆட்சியில் இருந்த போது அறிமுகமானது. உச்சநீதிமன்ற ஒப்புதலுடன், 2017 முதல், தமிழகம் உட்பட, அனைத்து மாநிலங்களிலும், நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, நீட் தேர்வுக்கு தயாரான மாணவர்களில், நான்கு பேர், மன உளைச்சல் காரணமாக, தற்கொலை செய்து கொண்டனர்.
இதன் காரணமாக, தமிழகத்தில், நீட் தேர்வுக்கு எதிரான குரல், ஓங்கி ஒலிக்க துவங்கியது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என, அறிவித்தார்.'பொய்யான வாக்குறுதி அளித்து, மாணவர்களை ஏமாற்றுகிறார்' என, அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.நீட் தேர்வுக்கு எதிராக, தி.மு.க., சார்பில், போராட்டமும் நடத்தப்பட்டது. அதேநேரம், தி.மு.க., பிரமுகர்கள் நடத்தும் பள்ளிகளில், நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக, விளம்பரங்கள் வெளியாகின.இதை, பா.ஜ.,வினர் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளனர்.


விளம்பரம்



தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலு குடும்பத்தினர் நடத்தும் பள்ளியில், ஏழாம் வகுப்பிலிருந்து, நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுவதாக வெளியான விளம்பரத்தை, பா.ஜ., தேசிய செயலர் ராஜா, சமூக வலைதளங்களில் வெளியிட்டுஉள்ளார்.பா.ஜ., தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் நிர்மல் குமார், தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் மகன் நடத்தும் கிங்ஸ்டன் சர்வதேச பள்ளியில், நீட், ஜெ.இ.இ., தேர்வுக்கு, பிளஸ் 1 வகுப்பு முதல், பயிற்சி அளிப்பதாக வெளியான விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.
இதேபோல, மும் மொழிக் கொள்கையை, தி.மு.க., எதிர்த்து வருகிறது. ஆனால், தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில், ஹிந்தி கற்று கொடுக்கப்படுகிறது. அதையும், அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் அம்பலப்படுத்தி, 'இது தி.மு.க.,வின் இரட்டை வேடம்' என, குற்றம் சாட்டி வருகின்றனர்.மும்மொழி கொள்கை, நீட் தேர்வு போன்றவற்றில், தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை, சமூக வலைதளங்களில், மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-செப்-202012:02:46 IST Report Abuse
skv srinivasankrishnaveni THITTUVADHUSREE RAAMANAI இடிப்பது ராமர்கோவில்களி கொள்ளை அடிக்கவே திரியும்கூட்டம்கள்தான் எல்லா தியாகி=விஷ காட்ச்சிகளும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-செப்-202004:29:35 IST Report Abuse
J.V. Iyer இவர்கள் யாவரும் முன்பு அரிதாரம் பூசி வேடமிட்டவர்கள். இப்போது அரசியல் மேடையில். இரட்டைவேடம் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று கேட்கிறார்கள்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
15-செப்-202023:43:08 IST Report Abuse
konanki அதனால் என்னங்க எங்க டுபாக்கூர் டாஸ்மாக் டுமிலன் க்கு 200 ரூபாய் காக்கா பிரியாணி ஓரு குவார்ட்டர் சாராயம் குடுத்தா திமுக ஓட்டு போட போறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X