பொது செய்தி

தமிழ்நாடு

ஆரோக்கியமான வாழ்வுக்கு 'போஷன் மா' விழிப்புணர்வு: சமூக வலைதளத்தில் 'மீம்ஸ்' வெளியிட்டு அசத்தல்

Added : செப் 15, 2020
Share
Advertisement
 ஆரோக்கியமான வாழ்வுக்கு 'போஷன் மா' விழிப்புணர்வு: சமூக வலைதளத்தில் 'மீம்ஸ்' வெளியிட்டு அசத்தல்

உடுமலையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சி குறித்து, 'மீம்ஸ்' வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலனை, பாதுகாக்கவும், மேம்படுத்தவும், மத்திய அரசின் சார்பில், ஊட்டச்சத்து மாத விழா நடத்தப்படுகிறது.
இதன்படி, பொதுமக்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை போன்ற நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வது, எடை குறைவான குழந்தைகளின் உடல் நலனுக்கு தேவையான ஊட்டச்சத்து, கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களின் உடல்நலம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மேலும், தன் சுத்தம், சுகாதாரம் குறித்தும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விளக்கப்படுகிறது.உடுமலை வட்டாரத்தில், இந்நிகழ்ச்சி துவங்கியுள்ளது. நடப்பாண்டில் கூடுதல் கவனம் செலுத்தி, அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில், 'போஷன் மா' எனப்படும் ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து, 'மீம்ஸ்' வடிவமைத்து, சமூக வலைதளங்களில், அலுவலர்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.மேலும், 'பேஸ்புக்'கில், புதிதாக 'போஷன் மா' உடுமலை என்ற பக்கத்தை உருவாக்கியும், நிகழ்ச்சிகளை, பொதுமக்களிடம் கொண்டு சென்று விழிப் புணர்வு ஏற்படுத்துகின்றனர். 'ஆன்லைன்' மூலம், கலந்துரையாடல் நடத்தி, யுடியூப் சேனல்களாக பதிவு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் வீணா தெரிவித்தார்.பொள்ளாச்சிமத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் சார்பில், 'போஷன் மா' என்ற தேசிய ஊட்டச்சத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. செப்., மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, ஊட்டச்சத்து உணவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டியில், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒன்றிணைந்து, காய்கறித்தோட்டம் அமைத்தனர்.
மேலும், ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கி குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வை ஏற்படுத்தி, வளமான இந்தியாவை உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.காய்கறித்தோட்டம் அமைப்பது குறித்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல், ஆனைமலை, தென்சங்கம்பாளையம் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் அண்ணாத்துரை தலைமையில், அங்கன்வாடி பணியாளர்கள் காய்கறித்தோட்டம் அமைத்து, ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X