பொது செய்தி

தமிழ்நாடு

சிக்னல் கிடைக்காமல் தவிப்பு :பி.எஸ்.என்.எல்., பாராமுகம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

வால்பாறை:வில்லோனி எஸ்டேட்டில், பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைக்காததால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறையில், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில் காடம்பாறை, வால்பாறை நகர், கவர்க்கல், அட்டகட்டி, சின்கோனா முடீஸ், சோலையார் நகர் உட்பட, 11 இடங்களில் செல்போன் டவர்கள் வைக்கப்பட்டுள்ளன.வால்பாறையில் பெரும்பாலான இடங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, வால்பாறையில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் உள்ள வில்லோனி எஸ்டேட்டில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பி.எஸ்.என்.எல்., செல்போன் சிக்னல் கிடைக்காததால், அவசரத் தேவைக்கு ஆம்புலன்சை கூட அழைக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.மக்கள் கூறுகையில், 'வன விலங்குகள் அதிகளவில் நடமாடும் பகுதியில், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். வசிக்கும் பகுதியில் பி.எஸ்.என்.எல்., செல்போன் டவர் சிக்னல் கிடைக்காததால், அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட அழைக்க முடியாத நிலையில் உள்ளோம். இதனால், குழந்தைகளின் 'ஆன்லைன்' வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர். மக்கள் நலன் கருதி, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் செல்போன் டவர்களை பராமரித்து, தடையின்றி சிக்னல் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X