ஓடையை சூழ்ந்த புதர் நீர் வழித்தடம் பாதிப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement
 ஓடையை சூழ்ந்த புதர் நீர் வழித்தடம் பாதிப்பு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள கோதவாடி ஓடையில் தண்ணீர் செல்ல முடியாமல் புதர்மண்டி காணப்படுகிறது.கோதவாடி செல்லும் ரோட்டில் ஓடை குறுக்கிடுகிறது. இதில், கிணத்துக்கடவு மாமாங்கம் ஆற்றில் இருந்து தண்ணீர் ஓடை வழியாக தாமரைக்குளம், சூலக்கல் ஆற்றுக்கு செல்கிறது.தற்போது, மழை பெய்வதால், ஆற்றில் இருந்தும், மழை தண்ணீரும் ஓடைக்கு வருகிறது. ஆனால், தண்ணீர் செல்ல வழியின்றி, ஓடை வழித்தடம் முழுவதும் புதர்மண்டியுள்ளது.இதனால், தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. தாமரைக்குளம் தடுப்பணை நிரம்புவதும் பாதிக்கிறது. ஓடையில் வளர்ந்துள்ள புதர்களை அகற்றினால், தண்ணீர் வேகமாக செல்லும். இதற்கு, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X