பேரூராட்சி அலட்சியத்தால் மக்கள் அச்சம்: இரு ஊழியர்களுக்கு தொற்று பாதிப்பு எதிரொலி

Added : செப் 15, 2020
Share
Advertisement

ஆனைமலை:ஆனைமலை பேரூராட்சி அலுவலகத்தில், இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, ஒருவர் இறந்துள்ளதால், ஒரு வாரத்துக்கு அலுவலகத்தை மூட வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை பேரூராட்சியில் அலுவலக உதவியாளராக பணியாற்றும் ஒடையகுளத்தை சேர்ந்த, 45 வயதான பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு முன், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நான்கு நாட்களுக்கு முன், பேரூராட்சியில் வாட்டர் மேனாக பணியாற்றிய காந்தி நகரை சேர்ந்த, 55 வயதானவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, வாட்டர் மேன் கடந்த, 11ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். பேரூராட்சியில் பணியாற்றும், 26 சுகாதார பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள், அலுவலர்களுக்கு பரிசோதனை செய்து, தொற்று அறிய மாதிரி சேகரிக்கப்பட்டது.ஆனால், பேரூராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி மட்டும் தெளித்து, வழக்கம் போல அலுவலகத்தை செயல்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, அலுவலகத்தை தற்காலிகமாக மூட வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மக்கள் கூறியதாவது:பொள்ளாச்சியில் ஸ்டேட் பாங்க் கிளையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாங்க் பூட்டப்பட்டது.
இதேபோல், போலீசார், மற்ற அரசு துறை அதிகாரிகளுக்கு தொற்று உறுதியாகும் போது, அலுவலகங்கள் பூட்டப்படுகிறது. இதனால், கொரோனா தொற்று பரவல் குறைகிறது.ஆனால், இருவருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், ஆனைமலை பேரூராட்சி அலுவலகம் பூட்டப்படாமல் செயல்படுத்தப்படுவது ஆபத்தை ஏற்படுத்தும். மக்கள், ஊழியர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. குறைந்தபட்சம், ஏழு நாட்களுக்கு அலுவலகத்தை மூடி, கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X