ராஜ்யசபா துணைத் தலைவராக ஹரிவன்ஷ் மீண்டும் தேர்வு

Added : செப் 15, 2020
Share
Advertisement
 ராஜ்யசபா துணைத் தலைவராக ஹரிவன்ஷ் மீண்டும் தேர்வு

புதுடில்லி : ராஜ்யசபாவின் துணைத் தலைவராக, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, ஹரிவன்ஷ் நாராயண் சிங், மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

ராஜ்யசபாவின் துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ் நாராயணன் சிங்கின், எம்.பி., பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, துணைத் தலைவர் பதவி காலியானது. அதற்கான தேர்தல் நேற்று நடந்தது. மீண்டும், எம்.பி.,யாக பொறுப்பேற்றுள்ள ஹரிவன்ஷ், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் சார்பில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த, மனோஜ் ஜா பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். நேற்று நடந்த தேர்தலில், ஹரிவன்ஷ் மீண்டும் வெற்றி பெற்றதாக, அறிவிக்கப்பட்டது.

குரல் வாக்கெடுப்பு மூலம், அவர் வெற்றி பெற்றார். கடந்த, 2018ல் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், காங்.,கின் பி.கே. ஹரிபிரசாதை வென்றார், ஹரிவன்ஷ். மீண்டும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹரிவன்ஷ்க்கு, சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X