கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்கள் அரசியல் கட்சிகள் மீது ஐகோர்ட் அதிருப்தி

Added : செப் 15, 2020
Share
Advertisement

சென்னை : தேர்வு பயத்தால், தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு, பண உதவி, வேலைவாய்ப்பு அளிப்பது போன்ற செயல்கள், தற்கொலையை ஊக்குவிப்பதாக உள்ளன' என்று, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கடந்த, 2018ல், அரியலுாரை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டார். அனிதா மரணம், தமிழகத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அப்போது, கிருத்திகா என்ற மாணவி, மருத்துவப் படிப்பு தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த மனுவை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். 'நுழைவு தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், மாவட்ட அளவில் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்; தேர்வு தோல்வியால் நிகழும் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசுக்கு, நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

தவறான முடிவு எடுப்பதற்கு முன், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் உரிய ஆலோசனைகளை அரசு வழங்கவும், இந்த விஷயத்தில் சினிமா பிரபலங்கள், கல்வியாளர்கள் ஈடுபடவும், நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். தற்போது, நீட் தேர்வு பயத்தால், நான்கு மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வில், வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஆஜராகி, ''மாணவர்கள் தற்கொலையை தடுக்கும் விஷயத்தில், அரசு தோல்வி அடைந்து விட்டது;

தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.மனு தாக்கல் செய்தால், விசாரிப்பதாக கூறிய நீதிபதிகள், 'தற்கொலை செய்து கொள்பவர்களின் குடும்பங்களுக்கு, அரசும், அரசியல் கட்சிகளும் பண உதவி, அரசு வேலை வழங்குவது போன்ற செயல்கள், தற்கொலையை ஊக்குவிப்பதாக உள்ளன' என, அதிருப்தி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X