பொது செய்தி

தமிழ்நாடு

கிணற்றுக்கு தடுப்புச்சுவர் 'தினமலர்' செய்தி எதிரொலி

Added : செப் 15, 2020
Share
Advertisement
 கிணற்றுக்கு தடுப்புச்சுவர் 'தினமலர்' செய்தி எதிரொலி

மடத்துக்குளம்:மடத்துக்குளம், கிருஷ்ணாபுரத்தில், தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கிணற்றுக்கு தடுப்புச்சுவர் இல்லாமல் இருந்தது. இதனால் ரோட்டின் ஓரத்தில் விலகிச் செல்லும் வாகனங்கள், இரவு நேரம் இந்தப்பகுதியை கடந்து செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வந்தது. இது குறித்து, 'தினமலரில்' செய்தி வெளியானது.இந்நிலையில், தற்போது தேசிய நெடுஞ்சாலை ஓரம் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று அடி உயரத்தில், கிணற்றை மறைத்து கான்கிரீட்டால் தடுப்புச்சுவர் கட்டி, அதன் பக்கவாட்டில் இரும்புத்துண்டால் நீண்ட தடுப்பும் பொருத்தியுள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், 'தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையில், தடுப்புச்சுவர் இல்லாத கிணறு ஆபத்தை எதிர்கொண்டு இருந்தது. தற்போது தடுப்புகள் அமைக்கப்பட்டு விபத்து அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X