பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் தொட்டி அமைக்க கே.கே.புதுாரில் பூமி பூஜை

Added : செப் 15, 2020
Share
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க சேமிப்பு தொட்டிகள் அமைப்பதற்கு பூமி பூஜை நடந்தது.மடத்துக்குளம் ஒன்றியம் மைவாடி ஊராட்சியில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்கு குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதற்குத்தீர்வாக, குடிநீர் வடிகால் வாரியத்தினர், வினியோகம் செய்யும் நீரை, தரை மட்ட நீர்த்தேக்கத்தொட்டியில தேக்கி, பின் வினியோகம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கும், சேமிக்கப்படும் நீரை உறிஞ்சி மேல்நிலை தொட்டிகளில் சேமித்து வைத்து பின்பு, வினியோகம் செய்ய, 10 எச்.பி. சோலார் பேனல் அமைப்பதற்கும் பூமி பூஜை நடந்தது.இதோடு கே.கே.புதுார் கிராமத்தில் நீர் சேமித்து வினியோகம் செய்ய, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைப்பதற்கும் பூமி பூஜை நடந்தது, இதில் மடத்துக்குளம் எம்.எல்.ஏ., ஜெயராமக்கிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் காவியா, துணைத்தலைவர் ஈஸ்வரசாமி உள்ளிட்ட பிரமுகர்கள், ஒன்றிய அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X