அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஹிந்தியை காப்பாற்றுவதை விட இந்தியரை காப்பாற்ற வேண்டும்' ; ஸ்டாலின்

Added : செப் 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'ஹிந்தியை காப்பாற்றுவதை விட  இந்தியரை காப்பாற்ற வேண்டும்' ; ஸ்டாலின்

சென்னை : 'ஹிந்தியை காப்பாற்றுவதை விட, கொரோனா பாதிப்பில் இருந்து, இந்தியரை காப்பாற்றுவதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா, ஹிந்தி மொழி இந்நாட்டை ஒருங்கிணைப்பதாக கூறி இருக்கிறார்.பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருக்கும் இந்நாட்டை, ஒரு சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி, எப்படி ஒருங்கிணைக்க முடியும்?வேற்றுமையில் ஒற்றுமை காணும், இந்தியாவின் ஒருமைப்பாட்டை கெடுக்கும் ஒன்றாகவே ஹிந்தி இருக்கிறது என்பதை, அமித் ஷா உணர வேண்டும். ஹிந்தியை காப்பாற்றுவதை விட, கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியரை காப்பாற்றுவதில், அவர் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

முப்பெரும் விழாதி.மு.க., தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:இன்று நடைபெறவுள்ள தி.மு.க., முப்பெரும் விழா வாயிலாக, நமக்குக் கிடைக்கிற ஊக்கமும், உற்சாகமும், அடுத்தடுத்து நாம் சந்திக்கும் களங்களுக்கேற்ற வலிமைத் தரக் கூடிவை. அடுத்தடுத்த வெற்றி விழாக்களுக்கான முன்னோட்டம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-செப்-202012:39:12 IST Report Abuse
ஆரூர் ரங் EPS ஸ்டாலின் ரெண்டு பேரும் மாறிமாறி நீட் & ஹீந்தீ லாவணி போட்டிப் பாட்டுக் கச்சேரி பாடியே தமிழகத்தின் அடிப்படைப் பிரச்னைகளிலிருந்து திசை திருப்புகிறார்கள்😡நீட் வேண்டாம்னா அதிக சித்த மருத்துவக் கல்லூரிகள் ( தமிழ் மீடியம் மட்டும் ) துவக்கி தமிழ் படித்த மாணவர்களுக்கு இடம் கொடுத்து முன்னேற்றலாமே? அப்போ 100 % தமிழர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிட்டுமே.😅 சரிதானே ?
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
15-செப்-202009:54:13 IST Report Abuse
நிலா முதலில் உங்கள் கட்சி சேர்ந்தவர்களுக்கு தமிழை கற்றுக் கொடுத்துவிட்டு இந்தி எதிர்ப்புக்கு வரவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X