சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.10 கோடி கேட்டு கொலை மிரட்டல் டில்லி ஆசாமிகள் மீது மூதாட்டி புகார்

Added : செப் 15, 2020
Share
Advertisement

சென்னை : அமலாக்கத் துறை வழக்கில் சிக்கியுள்ள மூதாட்டியின், 100 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயற்சிப்பதுடன், 10 கோடி ரூபாய் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்த, டில்லி ஆசாமிகள் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் மீனா ஞானசுந்தரம், 73. இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:என் கணவர் ஞானசுந்தரம், 2007ல் இறந்து விட்டார். நானும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன். தற்போது, மேடவாக்கத்தில், இளையமகன் பாலாஜியின் வீட்டில் வசித்து வருகிறேன்.எங்கள் உறவினர் ஒருவர், சுபிக் ஷா சூப்பர் மார்க்கெட் நிறுவனம் சார்பில், பல கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கி, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறையிடம் சிக்கினார்.

இது தொடர்பான வழக்கில், 25வது குற்றவாளியாக, என் பெயரையும் சேர்த்து விட்டனர். கையெழுத்து இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், டில்லியில் வசித்து வரும், ஷேக்அப்துல் ஹமீது மற்றும் அவரது சகோதரர் ஷேக் அப்துல் முகபூப் ஆகியோர் பழக்கமாகினர். இவர்கள், தங்களுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாகவும், அமலாக்க துறையின் உயர் அதிகாரிகள், தங்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பதாகவும் கூறினர்.பின், 'அமலாக்க துறையில் உள்ள வழக்கில், உன்னையும், மகன் பாலாஜியையும் அதிகாரிகள் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

'கைதில் இருந்து இருவரையும் தப்பிக்க வைக்க, 10 கோடி ரூபாய் தர வேண்டும்' எனக்கூறி, வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கினர்.நாங்கள் விசாரித்தபோது, எங்களை கைது செய்யக்கூடாது என, உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டு இருப்பது, உறவினர்கள் வாயிலாக தெரிய வந்தது. இந்த விபரம், தற்போது தான் தெரியவந்தது.ஆனால், ஷேக்அப்துல் ஹமீது மற்றும் ஷேக் அப்துல் முகபூப் ஆகியோர், அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு, 10 கோடி ரூபாய் கொடுத்து, கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றி இருப்பதாக தெரிவிக்கின்றனர். 10 கோடி ரூபாய் கேட்டு, எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

அபகரிக்க முயற்சி : அத்துடன், வெற்றுத்தாளில் பெற்ற கையெழுத்தை பயன்படுத்தி, சென்னையை அடுத்த, கோவிலாம்பாக்கத்தில், எனக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புஉள்ள, 4.5 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணம் வாயிலாக அபகரிக்க முயற்சி செய்கின்றனர். இருவர் மீதும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X