பொது செய்தி

தமிழ்நாடு

தொடரும் பருவமழையால் அணைகளில் ததும்பும் நீர்

Added : செப் 15, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறை சுற்றுப்பகுதி களில், தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்வதால், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து, தண்ணீர் ததும்புகிறது.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கடந்த, ஒரு மாதமாக பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அதிலும் கடந்த, பத்து நாட்களாக, இடைவிடாது கனமழை பெய்கிறது. இதனால், மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டு, தேயிலை பறிப்பு பணிகளும் முடங்கி, இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது.கனமழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 161.77 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,338 கனஅடி நீர் வரத்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு, 2,127 கனஅடி நீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், பரம்பிக்குளம் அணை நேற்று காலை நிலவரப்படி, 72 அடியில், 68.40 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்தது.நேற்று காலை, 8:00 மணி வரை, சோலையாறு - 40 மி.மீ., பரம்பிக்குளம் -- 29 மி.மீ., வால்பாறை - 53 மி.மீ., கீழ்நீராறு - 46 மி.மீ., மேல்நீராறு - 70 மி.மீ., மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X