பொது செய்தி

தமிழ்நாடு

வீடு தேடி சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்

Added : செப் 15, 2020
Share
Advertisement
 வீடு தேடி சென்று  பாடம் நடத்தும் ஆசிரியர்

வால்பாறை:வால்பாறை அடுத்த, சோலையாறு நகர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே பாடம் நடத்தி வருகின்றனர்.வால்பாறை சுற்றுப்பகுதிகளில், தோட்ட தொழிலாளர்கள், பழங்குடியின மக்களின் குழந்தைகள், அரசுப்பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த மாணவர்களிடம், 'ஸ்மார்ட் போன், டிவி' வசதி இல்லாததால், 'ஆன்லைன்' கல்வி எட்டாக்கனியாகவே உள்ளது.இந்நிலையில், மாணவர்களின் கல்வியை பாதுகாக்கும் விதமாக, சோலையாறு நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சிவசரவணன், மாணவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே பாதுகாப்பான முறையில் பாடம் நடத்தி வருகிறார். இதனால், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவரது முயற்சிக்கு பெற்றோர் முழு ஒத்துழைப்பு வழங்கி, பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.சோலையாறு நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆங்கில ஆசிரியர் சிவசரவணன் கூறியதாவது:பள்ளியில் நடப்பு கல்வியாண்டில், இதுவரை, 38 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களில், 90 சதவீதம் பேருக்கு, 'ஆன்லைன்' கல்வி பயில முடியாத சூழல் உள்ளது. மொபைல் டவர் 'சிக்னல்' கிடைக்காமல் உள்ளதாலும் சிரமப்படுகின்றனர்.இதனையடுத்து, மாணவர்கள் சிரமத்தை போக்க அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று, கோவில் வளாகம், பள்ளி வளாகங்களில் ஆங்கில பாடம் கற்று தருகிறேன். மழை, வெயிலை பொருட்படுத்தாமல், மொபட்டில் மாணவர்களை தேடி சென்று, தினமும் ஒவ்வொரு பகுதியில் பாடம் நடத்துகிறேன்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X