பொது செய்தி

தமிழ்நாடு

இரவு காவலர் இல்லாத பள்ளிகளில் திருட்டு! கல்வித்துறை நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

உடுமலை:பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், கதவை உடைத்து, லேப்டாப் உட்பட பொருட்கள் திருடப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் இரவுக்காவலர் நியமிப்பது அவசியமாகியுள்ளது.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்தில் மொத்தமாக, 188 துவக்க மற்றும் 46 நடுநிலை, 34 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
இதில், பெரும்பாலான பள்ளிகளுக்கு, இரவுக்காவலர் இல்லை. இந்நிலையில், குடிமங்கலம் ஒன்றியம், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், இரண்டு நாட்களுக்கு முன், திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.பள்ளி வளாகத்திற்குள் புகுந்து, அலுவலக அறை, கதவை உடைத்து, 3 லேப்டாப் உட்பட பொருட்களை திருடிச்சென்றுள்ளனர். வளாகத்தில், கண்காணிப்பு கேமராக்களும் இல்லை.இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் அளித்த புகாரின் பேரில், குடிமங்கலம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கிராமப்புறங்களிலுள்ள, துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, கல்வித்துறை சம்பந்தப்பட்ட, மாவட்ட, ஒன்றிய நிர்வாகத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதே போல், தன்னார்வ அமைப்புகள், பெற்றோர் பங்களிப்புடன், பள்ளி வளாகத்தில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதும் அவசியமாகும். இது குறித்து நடவடிக்கை எடுக்க கல்வி ஆர்வலர்களும், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு, கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X