புலம் பெயர்ந்தோர் உயிரிழப்பு மத்திய அரசு கைவிரிப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுடில்லி : 'ஊரடங்கின் போது, ஊர் திரும்பிய புலம் பெயர் தொழிலாளர்களின் இறப்பு குறித்த விபரங்கள் பராமரிக்கப்படவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று லோக்சபாவில், ஊரடங்கின் போது, சொந்த ஊர் செல்லும் வழியில் உயிரிழந்த, புலம் பெயர் தொழிலாளர் விபரங்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு, அரசு நிதியுதவி செய்துள்ளதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்னையை மதிப்பிட்டதில், அரசு தோல்வி அடைந்து விட்டதா எனவும் கேட்கப் பட்டது. உரிய தீர்வுஇந்த கேள்விகளுக்கு, மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்பு துறை அமைச்சர், சந்தோஷ் குமார் கங்வார் அளித்த பதில்:கடந்த, மார்ச், 25 முதல், 68 நாட்கள் வரை நீடித்த முழு ஊரடங்கின் போது, சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் உயிர்இழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் தகவல்கள் எதுவும் மத்திய அரசிடம் இல்லை.

அதன் காரணமாக, உயிரிழந்த புலம் பெயர் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தரும் கேள்வி எழவில்லை.தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், இதுவரை இல்லாத வகையில் கொரோனா மற்றும் ஊரடங்கால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு உரிய தீர்வுகளை, மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளன. 1.04 கோடி பேர்புலம் பெயர் தொழிலாளர்களுக்காக, மே, 1 முதல், 4,611 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அவற்றில், 1.04 கோடி பேர் சொந்த ஊர் திரும்பினர். அதில், உ.பி., பீஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, 63.07 லட்சம் பேர் சென்றுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்டையே, 'மே 9 - 27 வரை சிறப்பு ரயில்களில் சென்ற, புலம் பெயர் தொழிலாளர்களில், 4 -85 வயது வரையிலான, 80 பேர் இறந்துஉள்ளனர்; அதில், நோயாளி கள், விபத்தில் பலியானோர் ஆகியோரும் அடங்குவர்' என, ரயில்வே பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X