பொது செய்தி

தமிழ்நாடு

பண்ணை குட்டை அமைக்க மானியம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:விவசாயத்தில் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருவது பாசன நீர் பற்றாக்குறையாகும். நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், பருவமழை தவறும் போது, பாசன நீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.ஆண்டு முழுக்க கிணறு மற்றும் போர்வெல் மூலம், நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்துவோர், நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தும் முயற்சிகள் எடுக்காததே இதற்கு காரணம்.மழைநீரை முறையாக சேகரிப்பது, நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக உள்ளது. விவசாய நிலங்களில், தாழ்வான பகுதிகளில், மழைநீர் தேங்கும் வகையில் பண்ணை குட்டை அமைப்பது முக்கியமான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக உள்ளது.இதன் மூலம், பாசன ஆதாரங்களும், நிலத்தடி நீர்மட்டமும் வளம் பெறுகிறது. விவசாயிகள் பண்ணை குட்டை அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், தெற்கு தோட்டக்கலை துறையில் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு, குறைந்தபட்சம் ஒரு ெஹக்டேர் நிலம் இருக்க வேண்டும். விளைநிலத்தின் ஒரு பகுதியில், 20 மீட்டர் அகலம், 20 மீட்டர் நீளம், மூன்று மீட்டர் ஆழத்துக்கு குட்டை அமைக்கலாம்.இந்த குட்டை அமைக்கும் செலவில், 75 ஆயிரம் ரூபாய் வரை தோட்டக்கலை துறையில் மானியமாக பெறலாம். மேலும் விபரங்களுக்கு, தெற்கு தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை, தோட்டக்கலை உதவி இயக்குனர் சவுமியா தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X