இந்தியாவில் குறைந்த சீன முதலீடு: லோக்சபாவில் அமைச்சர் தகவல்

Updated : செப் 16, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
இந்தியாவில் குறைந்த சீன முதலீடு லோக்சபாவில் அமைச்சர் தகவல்

புதுடில்லி : “இந்தியாவில், சீன நிறுவனங்கள் செய்யும் அன்னிய முதலீடுகள், கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்து வருகின்றன,” என, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்தார்.கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பார்லிமென்டின், மழைக்கால கூட்டத்தொடர், நேற்று துவங்கியது.


முதலீட்டு தொகை



அப்போது லோக்சபாவில், அன்னிய நேரடி முதலீடுகள் குறித்து தகவல்களை வெளியிட்டு, நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது:கடந்த, 2017 - 2018 நிதிஆண்டில், இந்தியாவில் சீன நிறுவனங்கள் செய்த, எப்.டி.ஐ., எனப்படும், அன்னிய நேரடி முதலீட்டு தொகையின் அளவு, 2,574 கோடி ரூபாயாக இருந்தது.இது, 2018 - 2019ல், 1,683 கோடி ரூபாயாக குறைந்தது. இதேபோல், 2019 - 2020 ல், 1,204 கோடி ரூபாயாக குறைந்தது.இதன் மூலம், சீன நிறுவனங்கள் செய்யும் நேரடி அன்னிய முதலீடுகளின் அளவு, கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்து வருவது தெரிகிறது.இதேபோல், சீனாவிற்கு, இந்தியாவில் இருந்து செல்லும் முதலீட்டுத் தொகையின் அளவு, கடந்த ஆண்டு, இந்த காலகட்டத்தில், 202 கோடி ரூபாயாக
இருந்தது.இந்த ஆண்டு, அந்த தொகையின் அளவு, 152 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.


அனுமதி



இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடுகளை செய்யவேண்டும் என்றால், மத்திய அரசின் அனுமதியை பெறவேண்டியது கட்டாயமாகும். அதன்படி, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தனிநபர், நிறுவனம் என யார் வேண்டுமானாலும், இந்தியாவில் முதலீடு செய்யலாம். ஆனால், அதற்கு, மத்திய அரசின் அனுமதி தேவை. பொதுத் துறை வங்கிகளில் செய்யப்படும், எப்.ஐ.ஐ., எனப்படும், வெளிநாட்டு நிறுவன முதலீடுகளின் அளவை, 20 சதவீதத்தில் இருந்து, 49 சதவீதமாக உயர்த்துவது என, மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. சட்டப்படி, பொதுத் துறை நிறுவனங்களில், வெளிநாட்டு நிறுவனங்கள், 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கக்கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
16-செப்-202010:05:54 IST Report Abuse
மூல பத்திரம் அவனுங்க சகவாசம் வேண்டாம், தூதரக உறவுகளையும் அதற்க்கேற்றார் போல் குறைத்துக்கொள்ளவேண்டும்
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
15-செப்-202014:57:06 IST Report Abuse
mathimandhiri அலிபாபாக் காரன் செஞ்ச வேலையைப் பாத்தீங்களா? அது தான் சொன்னேன். சீனாவின் ஒவ்வொரு குடி மகனும் அதே ரகம். சப்பை மூக்கங்களை எல்லா நாட்டிலிருந்தும் உடனே துரத்தி அடிக்க வேண்டும்.இல்லையேல், அதோ கதி தான்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
15-செப்-202009:11:33 IST Report Abuse
Girija எல்லா சப்பைமூக்கனையும் அடித்து விரட்டுங்கள், சீன தயாரிப்புகளை குறிப்பாக குழந்தைகள் பொம்மையிலிருந்து இப்போதிருந்தே புறக்கணிக்க ஆரம்பிப்போம். வரும் நாட்களில் எல்லா சீனா தயாரிப்புகளை ஒவ்வொன்றாக புறக்கணிப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X