சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை தாக்கி பெண் காயம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறை அருகே, தமிழக - கேரள மாநில எல்லையில் உள்ள மயிலாடும்பாறை எஸ்டேட் பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு, இந்த எஸ்டேட் தொழிலாளி கல்யாணி,59, வீட்டின் அருகேயுள்ள கடைக்கு சென்று, வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, ஒற்றை காட்டு யானை, திடீரென அவரை தும்பிக்கையால் தள்ளிவிட்டு வனத்தினுள் சென்றது. கீழே விழுந்து படுகாயமடைந்து, அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, வெற்றிலைப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X