பொது செய்தி

தமிழ்நாடு

'பொள்ளாச்சி மாவட்டம்' அறிவிப்புக்கு வலியுறுத்தல்!

Added : செப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'பொள்ளாச்சி மாவட்டம்' அறிவிப்புக்கு வலியுறுத்தல்!

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு போயர் சமூக மக்கள் கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனு:பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், போயர் இன மக்கள், ஒரு லட்சத்து, 10 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். அதில், 70 சதவீதம் பேர் கல்வி அறிவு பெறாதவர்கள். உடுமலை தாலுகா தளியில், 300 குடும்பங்கள் உள்ளன.
தளியில் இருந்து, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்ல, 80 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும்; அதே நேரத்தில், பொள்ளாச்சிக்கு வர, 30 கி.மீ., தான் பயணம் செய்ய வேண்டும்.வால்பாறையில் இருந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்ல, 104 கி.மீ., பயணிக்க வேண்டும். இதனால், மன உளைச்சலும், மனச்சோர்வும் ஏற்படுகிறது. பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்கினால், மருத்துவ கல்லுாரி அமையும். ஏழை, எளிய மக்கள் அலைகழிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.இந்த கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறோம். கோரிக்கையை உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை சபாநாயகர், கால்நடைத்துறை அமைச்சர் ஆகியோர் முதல்வரிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆளுங்கட்சி அத்துமீறல்
தி.மு.க., நகர பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனு: தேர்தல் ஆணையத்தின் சார்பில், பழைய வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்றாக, ஸ்மார்ட் கார்டு வடிவில், புதிதாக அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதனை வீடு, வீடாக சம்பந்தப்பட்ட நகராட்சி, வருவாய்துறை அலுவலர்கள் நேரில் வந்து வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு, ஆளுங்கட்சியனர், அடையாள அட்டையை வழங்குகின்றனர்.நகராட்சி சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இப்பணியை மேற்கொள்ள வேண்டும். அ.தி.மு.க., கட்சியினரிடம் வழங்கப்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டையை பறிமுதல் செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202017:30:16 IST Report Abuse
Ram Pollachi கோவை மாவட்டத்தில் இருந்த திருப்பூரை பிரித்து நாசம் செய்தது போதாதா? பொள்ளாச்சியில் விடியக் காலை தென்னையை புடுங்கி மதியம் கல்லை நட்டுகிறான் பொழுதோட போய் சென்ட் என்ன விலை என்று கேட்டால் எல்லாம் புக் ஆகிவிட்டது என்கிறார்கள். விவசாயம், தொழில் செய்ய இடமில்லை, குடிக்க தண்ணீர், மருத்துவ வசதி இல்லை மாவட்டம் ஆக்க ஏன் அவசரம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X