கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தென்காசி கலெக்டர் ஆபீஸ் தடை கேட்டு வழக்கு

Added : செப் 15, 2020
Share
Advertisement

மதுரை : தென்காசியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட தடை கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த, சிவபத்மநாபன் தாக்கல் செய்த பொதுநல மனு:திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. தென்காசி மேலகரத்தில், 29 ஏக்கர், 87 சென்டில் புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த அரசுத் துறை அலுவலகங்கள் அமைக்க, தமிழக அரசு, ஜூலை, 22ல் அரசாணை பிறப்பித்தது.அந்த இடம், மேற்குத் தொடர்ச்சி மலையில், பழைய குற்றாலத்தில் உள்ளது. மழைக்காலத்தில் சுற்றிலும் நீர் தேங்கும்.

சீசன் நேரங்களில், சுற்றுலாப் பயணியர் அதிகம் வருவர். சுற்றிலும், ஐந்து குளங்கள் உள்ளன.அங்கு கட்டடம் அமைத்தால், பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும். மக்கள் எளிதில் வந்து செல்ல முடியாது. அங்கு கலெக்டர் அலுவலகம் அமைக்க, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். மேலகரத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் அமைக்க, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார்.நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு, தமிழக தலைமைச் செயலர், வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, அக்., 8க்கு ஒத்தி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X