பொது செய்தி

தமிழ்நாடு

நிலத்தடி நீர் பாதுகாக்க கோரிக்கை

Added : செப் 15, 2020
Share
Advertisement
 நிலத்தடி நீர் பாதுகாக்க கோரிக்கை

உடுமலை:வறண்டு கிடந்த குடிமங்கலம் பகுதி குளங்களுக்கு, தொடர் மழையால், நீர் வரத்து கிடைத்துள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்தில், ஆறு உட்பட நீராதாரங்கள் இல்லாத நிலையில், உப்பாறு ஓடை மற்றும் குளங்களே, நிலத்தடி நீர் மட்டத்துக்கு, ஆதாரமாக உள்ளன.பருவமழைக்காலங்களில் மட்டுமே குளங்களுக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தின் போது, விவசாயிகள், தங்களுக்குரிய பாசன நீரை குளங்களில், தேக்க ஆர்வம் காட்டினர்.
அதன்படி, குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 13க்கும் மேற்பட்ட குளங்களில், அரசு உத்தரவுபடி, பாசன நீர் நிரப்பப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் சரியாமல் பாதுகாக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த சில வாரத்தில், பரவலாக பெய்து வரும் மழையால், குளங்களுக்கு நீர் வரத்து கிடைத்துள்ளது. குடிமங்கலம் உட்பட குளங்களில், நீர் தேக்க பரப்பில், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ஒரு முறை, குளங்களுக்கு தண்ணீர் வழங்கினால், வறட்சியான குடிமங்கலம் பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் சரியாமல், இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X