பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் அதிகரிக்கும் காய்கறி சாகுபடி: நாற்றுக்கள் விற்பனை 'ஜோர்'

Added : செப் 15, 2020
Share
Advertisement
 மழையால் அதிகரிக்கும் காய்கறி சாகுபடி: நாற்றுக்கள் விற்பனை 'ஜோர்'

உடுமலை:உடுமலை பகுதிகளில், பருவமழை அதிகரித்த நிலையில், அணைகளிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காய்கறி சாகுபடி அதிகரித்துள்ளது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான நாற்றுக்களை, நாற்றுப்பண்ணைகள் மூலம் பெற்று, நடவு செய்து வருகின்றனர்.
இப்பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நாற்றுப்பண்ணைகள் உள்ளன.உடுமலை பகுதியில், இயல்பை விட கூடுதலாக பருவ மழை பெய்துள்ள நிலையில், பி.ஏ.பி., மற்றும் அமராவதி அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதனால், நாற்றுப்பண்ணைகளில், நாற்றுக்கள் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. நாற்று தட்டுப்பாடு ஏற்பட்டு, பதிவு அடிப்படையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.நாற்றுப்பண்ணை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:தக்காளி பெட்டி, 500 ரூபாய் வரை விற்று வருவதால், அதிகளவு விவசாயிகள் தக்காளி நாற்று நடவு செய்கின்றனர்.
அதே போல், மிளகாய் கிலோ, 30 முதல் 50 ரூபாய் வரையும், கத்தரி, காலிப்ளவர் என காய்கறிகளின் விலை உயர்வால், சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.தக்காளி நாற்று, ஒன்று, 50 காசு முதல் 80 காசு வரையும், மிளகாய், 80 காசு,கத்தரி, 50 காசு, காலிப்ளவர், 80 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.சாகுபடி பரப்பு அதிகரிப்பால், நாற்றுப்பண்ணைகளில் நாற்று உற்பத்தி அதிகரித்துள்ளதோடு, தட்டுப்பாடு காரணமாக, முன்பதிவு அடிப்படையில் வினியோகம் செய்யப்படுகிறது.இவ்வாறு, நாற்றுப்பண்ணை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X