பொது செய்தி

தமிழ்நாடு

தெப்பக்குளமேட்டில் பட்டா வழங்க சிறப்பு சர்வே! ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டர் அறிவிப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement
 தெப்பக்குளமேட்டில் பட்டா வழங்க சிறப்பு சர்வே! ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டர் அறிவிப்பு

பொள்ளாச்சி:'கல்லார் மக்களுக்கு தெப்பக்குளமேட்டில் பட்டா வழங்க, சிறப்பு சர்வே பணிகள் மேற்கொள்ளப்படும்,' என, ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.வால்பாறை கல்லார் பழங்குடியின மக்களுக்கு அனுபவ உரிமை பட்டா வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
சப் - கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்தார். ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டம் துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர், உதவி வன பாதுகாவலர் செல்வம் முன்னிலை வகித்தனர். வருவாய்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள், கல்லார் பழங்குடியின மக்கள் பங்கேற்றனர்.சப் - கலெக்டர் பேசியதாவது:ஆனைமலை புலிகள் காப்பகத்தில், 17 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. அதில், 187 பேருக்கு அனுபவ உரிமை பட்டா வழங்கப்படுகிறது. கல்லார் செட்டில்மென்ட் பழங்குடியின மக்கள், தெப்பக்குளமேட்டில் பட்டா வழங்க வேண்டும்; கல்லாரில் வழக்கம் போல விவசாயம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி வழங்கியுள்ளனர்.
வனத்துறையினர், தெப்பக்குளமேட்டில் பட்டா வழங்குவதற்கு அனுமதி வழங்க கோரி பரிந்துரையுடன் கடிதம், தேசிய புலிகள் காப்பக ஆணையத்துக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர். தெப்பக்குளமேட்டில் அனுபவ உரிமை பட்டா வழங்குவதற்காக சிறப்பு சர்வே பணிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 212 பட்டா ரத்தானது குறித்து 'ரி சர்வே' மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு, கூறினார்.மாணவிக்கு வேலைவால்பாறையை சேர்ந்த பழங்குடியின மாணவி சிவகாமி, எம்.எஸ்.டபுள்யூ., (மாஸ்டர் ஆப் சோஷியல் வொர்க்) படித்துள்ளார். அவர், அங்கன்வாடி சமையலர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில், பழங்குடியின மாணவியின் தாய், சப் - கலெக்டரிடம் வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, சப் - கலெக்டர், வனத்துறையினருடன் ஆலோசித்து, டாப்சிலிப்பில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணி வழங்கலாம்; பள்ளி திறந்ததும் பெண்கள் பணியில் சேரலாம் என தெரிவித்தார்.மேலும், பழங்குடியின மக்களுக்காக வால்பாறையில் அக்டோபர் முதல் வாரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக சப் - கலெக்டர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X