பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement
 சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

உடுமலை:ஊரடங்கு தளர்வு காரணமாக, திருமூர்த்தி மலை, அமராவதி அணை சுற்றுலா மையங்களுக்கு மக்கள் வருகை அதிகரித்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக, ஆறு மாதமாக மூடப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, கோவில், சுற்றுலா மையங்களுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.உடுமலை அருகே, திருமூர்த்திமலை மற்றும் அமராவதி அணை ஆகிய சுற்றுலா மையங்கள் உள்ளன.திருமூர்த்திமலையில், அணை, சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒழுங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சலிங்கம் அருவி உள்ளது. முழுமையாக திறக்கப்படாத நிலையில், பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதியில்லை.அதே போல், அமராவதி அணை பூங்கா, முதலைப்பண்ணை உள்ள நிலையில், முதலைப்பண்ணை திறக்கப்படவில்லை. முறையாக திறக்கப்படாத நிலையிலும், சுற்றுலா மையங்களுக்கு பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது. பஸ்கள், சொந்த வாகனங்கள் மூலம், குடும்பத்துடன் பலரும் வந்து செல்கின்றனர். முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X