பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி அணையில் பராமரிப்பு பணி தீவிரம்

Added : செப் 15, 2020
Share
Advertisement
 அமராவதி அணையில்  பராமரிப்பு பணி தீவிரம்

உடுமலை:உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்கள் பயன்பெற்று வருகின்றன. தற்போது அணைப்பகுதியில், ஷட்டர் பராமரிப்பு, கசிவு நீர் வெளியேற்றும் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.மேலும், அணையிலிருந்து, ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் மதகுகள் வழியாக தண்ணீர் செல்லும் வகையில், ஆற்றில் மண் அரிப்பு ஏற்படாத வகையில், தடுப்பு சுவர் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமலும், மரம், செடிகள் முளைத்தும், பல இடங்களில் சரிவு ஏற்பட்டும் காணப்பட்டது.தற்போது, கட்டுமானத்தை பாதிக்கும் வகையில் இருந்த, மரங்கள் அகற்றப்பட்டு, ஓட்டைகள், சரிவுகளில் சிமெண்ட் பூச்சு வேலைகள் நடந்து வருகின்றன. ஆண்டு பராமரிப்பு நிதியில் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X