பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி கோட்டத்தில் 10 பேருக்கு தொற்று உறுதி

Added : செப் 15, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலையில், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களது குடியிருப்புகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.பொள்ளாச்சி ஆர்.கே., நகரில், 61 வயது முதியவர், இந்திராநகரில், 26 வயது ஆண், பாலகோபாலபுரம் வீதியில், 23 வயது ஆண், சின்னாம்பாளையம் ராமலிங்கம் காலனியில், 67 வயது முதியவர், அவரது மனைவி, வஞ்சியாபுரம் பிரிவில், 29 வயது ஆண், திப்பம்பட்டியில், 50 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.ஆனைமைலையை சேர்ந்த, 44 வயது தனியார் சித்த மருத்துவர், திவான்சாபுதுரை சேர்ந்த, 43 வயது ஆண், அவரது மனைவி ஆகியோருக்கு தொற்று உறுதியானது. பொள்ளாச்சியில் நேற்று, தொற்று உறுதியான 10 பேருக்கும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, கோவை இ.எஸ்.ஐ., மற்றும் சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.அவர்களது குடியிருப்புகள் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டில் இருப்போருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X