பொது செய்தி

தமிழ்நாடு

மீட்புப்பணியில் தனியார் நிறுவனம்; பேரிடரை சமாளிக்க வியூகம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருப்பூர்:சிறந்த முறையில் பணியாற்றும், தனியார் கட்டுமான நிறுவனத்தினரை கண்டறிந்து, மழை வெள்ளசேதம் ஏற்படும் போது, அவர்களையும் மீட்புப்பணியில் ஈடுபடுத்த, மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வரும், அக்., துவங்கி, வடகிழக்கு பருவமழை துவங்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் மழை பாதிப்பை எதிர்கொள்ளவும் மற்றும் தவிர்க்கவும், மாவட்ட நிர்வாகம், அனைத்து அரசு துறையினரையும் 'அலர்ட்' செய்துள்ளது.தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பாக தங்க வைக்க, இடம் தேர்வு செய்வது, மழைவெள்ள சேதத்தால் பாதிக்கப்படும் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு, நிவாரண பொருட்களை உடனடியாக கொண்டு சென்று சேர்க்க ஏற்பாடு செய்வது என, பல்வேறு உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
மேலும், நிவாரண பணி தடையின்றி நடக்கவும், நிவாரண பொருட்களை கொண்டு செல்ல வசதியாக, போக்குவரத்து கழகம் சார்பில், ஐந்து பஸ்கள், எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தீயணைப்பு துறையினர், மீட்புப்பணி தொடர்பான ஒத்திகை பயிற்சி நடத்தி, தயார்நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வழித்தடத்தில், மரம் முறிந்து விழுந்தால், உடனே அப்புறப்படுத்த, தேவையான உபகரணத்துடன் தயாராக இருக்க வேண்டும் என, நெடுஞ்சாலை துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆலோசனையில், தாலுகா வாரியாக, சிறந்த முறையில் பணியாற்றும், கட்டுமான நிறுவனங்களின் விபரம் சேகரிக்கப்படுகிறது. கடும் மழைவெள்ள பாதிப்பு ஏற்பட்டால், மீட்புப்பணிக்கு, அந்நிறுவன பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.மின்வாரியம் மற்றும் துணை மின் நிலையங்களில், ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தி, மின்தடையின் போதும், பணிகளை விரைந்து முடித்து, சீரான மின்வினியோகம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X