ஜனாதிபதி, பிரதமர் உட்பட 10,000 பேரை உளவு பார்த்த சீன நிறுவனம்

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement

புதுடில்லி: சீன நிறுவனம் நம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்களை வேவு பார்த்து அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.



latest tamil news



இந்தியா - சீனா இடையே தற்போது எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இந்தியப் பயனாளிகள் தொடர்பான தகவல்கள் திருடப்படுவதாகக் கூறி 'டிக்டாக்' உட்பட சீனாவைத் தலைமையிடமாக வைத்து செயல்படும் 100க்கும் மேற்பட்ட அலைபேசி செயலிகள், சமூக வலைதளங்கள், இணைய தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் வெளியாகும் பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள புலனாய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவின் ஷென்சென் நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஷென்ஹூவா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு தகவல்களை திரட்டி தரும் சேவைகளை செய்து வருவதாக தன் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சீன அரசுக்காக இந்தியா உட்பட பல நாடுகள் தொடர்பான தகவல்களை அளித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியாவைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் குறித்த தகவல்களை அந்த நிறுவனம் திரட்டியது தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட நபரின் நெருங்கிய உறவினர்கள் குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. தன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு இந்தத் தகவல்கள் சீன அரசுக்கு உதவுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா, அவருடைய குடும்பத்தார், முதல்வர்களில் மம்தா பானர்ஜி, அசோக் கெலாட், அமரீந்தர் சிங், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக், சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்களில் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, பியுஷ் கோயல், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஆகியோர் வேவு பார்க்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள், தொழிலதிபர்களான ரத்தன் டாடா, கவுதம் அதானி, அம்பானி சகோதரர்கள் என பட்டியல் நீள்கிறது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் என பல அரசியல் தலைவர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், பல சினிமா நட்சத்திரங்கள், ஆன்மிகவாதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பத்திரிகையாளர்களும் இந்தப் பட்டியலில் உள்ளனர். இதைத் தவிர பொருளாதார குற்றவாளிகள், ஊழல் செய்வோர், போதைப் பொருள் உள்ளிட்டவற்றை கடத்துவோரும் சீன நிறுவனத்தின் கண்காணிப்பில் இருந்துள்ளனர். இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமாக உள்ள நிலையில் தகவல் போரை சீனா நடத்தி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



பட்டியலில் உள்ள பிரபலங்கள்:


சீன நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக உளவு பார்த்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. சீன நிறுவனம் உளவு பார்த்த பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளோர்:

* மறைந்த முன்னாள் ஜனாதிபதிகளான அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி மற்றும் அவர்களுடைய குடும்பத்தார்

* முன்னாள் பிரதமர்களான ராஜிவ், நரசிம்ம ராவ், வாஜ்பாய், தேவ கவுடா, மன்மோகன் சிங் மற்றும் அவர்களுடைய குடும்பத்தார்

* பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட முன்னாள் மற்றும் தற்போதைய முதல்வர்கள்

* பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட முன்னாள், இன்னாள் எம்.பி.க்கள்

* பா.ஜ., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பெரும்பாலான மாநிலக் கட்சிகள்

* 700க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள்; 460க்கும் மேற்பட்ட அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள்

* 100க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் குடும்பங்கள்

* 12க்கும் மேற்பட்ட முன்னாள் மற்றும் தற்போதைய கவர்னர்கள்

* பல முக்கிய நகரங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மேயர்கள், துணை மேயர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202017:01:51 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) அடுத்த நாட்டுக்குள் புகுந்து தனி மனித தகவல்களை திருடும் சீநா விரைவில் தனது அதிகாரத்தை இழக்கும் இருபது உயிர்களை கொன்றதுக்கு விரைவில் பதில் கிடைக்கும்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
15-செப்-202012:19:56 IST Report Abuse
Nagarajan D இதற்க்கு இந்த நாட்டு உண்டியல் குலுக்கிகள் என்ன சொல்ல போறானுங்க... தன் கட்சியையே 25 கோடிக்கு வித்தவனுங்க தானே .
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
15-செப்-202011:54:47 IST Report Abuse
sankaseshan சோனியா குடும்பத்தை ஏன் விட்டு விட்டார்கள் ? அரசு Thungi கொண்டிருந்தா ஏன்னு கேள்வி கேட்கும் நபர் விளக்கு பிடித்து பார்த்தாரா ?
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-செப்-202013:26:04 IST Report Abuse
Ramesh Rஉன்னை எப்படி உளவு பார்க்காமல் விட்டு விட்டார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X