பொது செய்தி

தமிழ்நாடு

தொலைதூர பயணம் எளிதாகும்: பஸ் சேவை துவங்கியாச்சு

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில் இருந்து, தொலைதுார பஸ் இயக்கம் நேற்று, துவங்கியது.கடந்த, 7ம் தேதி முதல், அனைத்து பகுதிகளுக்கும் பஸ் இயக்கம் துவங்கியது. அடுத்தடுத்த நாட்களில், பயணிகள் கூட்டம் மெல்ல அதிகரித்தது. கடந்த, 10ம் தேதி முதல், 60 சதவீத பஸ் இயக்கப்பட்டது.
நேற்று முதல், திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்செந்துார், நாகர்கோவில், ராமேஸ்வரம், தஞ்சாவூர் வேளாங்கன்னி, திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம், திருநெல்வேலி உள்ளிட்ட தொலை துாரங்களுக்கும் பஸ் இயக்கம் துவங்கியது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஊட்டி மற்றும் வால்பாறைக்கு, இன்று முதல் பஸ் இயக்கப்பட உள்ளது.
தற்போதைய நிலையில், திருச்சி, கரூரில் இருந்து ஊட்டி செல்லும் பஸ்கள், திருப்பூர் வழியாக பயணிக்கின்றன.போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'நேற்று முதல், 90 சதவீத பஸ் இயக்கப்படுகிறது. காலை, 5:30 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, பஸ் இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, திருப்பூர் மண்டலத்தில் உள்ள, 437 பஸ்களில், 395 பஸ், இயக்கத்துக்கு வந்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X