சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவுறு எழுத்தருக்கு கொரோனா: தெற்கு தாலுகா அலுவலகம் மூடல்

Added : செப் 15, 2020
Share
Advertisement
 பதிவுறு எழுத்தருக்கு கொரோனா: தெற்கு தாலுகா அலுவலகம் மூடல்

திருப்பூர்:பதிவுறு எழுத்தருக்கு கொரோனா உறுதியானதால், திருப்பூர், தெற்கு தாலுகா அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.திருப்பூர், தெற்கு தாலுகா அலுவலகம், செவந்தாம்பாளையத்தில் இயங்கி வருகிறது. அங்கு பணபுரியும், 54 வயது, பதிவுறு எழுத்தர், கோவையில் இருந்து பணிக்கு வந்து செல்கிறார்.அவருக்கு, கொரோனா தொற்று உறுதியான நிலையில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.பதிவறை, பொதுசேவை மற்றும் ஆதார்பதிவு மையம் ஆகியவை, தெற்கு தாலுகாவில் அருகருகே உள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, மூன்று நாட்களுக்கு தாலுகா அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மாநகராட்சி பணியாளரை கொண்டு, வளாகம் முழுதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X